இன்றைய ராசிபலன் (19-07-2022) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

1686

இன்றைய ராசிபலன்….

மேஷம்

மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புது உத்வேகம் பிறக்கும் இனிய நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கடன் சுமை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு எனவே திட்டமிடல் மிகவும் அவசியமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கவலைகள் மறந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய காலமாக இருக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு உற்சாகத்தை கொடுக்கும்.

ரிஷபம்

ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கனிவுடன் இருப்பது ரொம்பவும் நல்லது. உங்களுடைய முன்கோபம் பல பகைகளை சம்பாதிக்கலாம் எனவே நிதானம் தேவை. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு கடுமையான குழப்பம் நீடிக்கும். எதையும் அதன் போக்கில் விட்டு விடுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை குறையும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

மிதுனம்

மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தொடர் முயற்சிக்கு உரிய வெற்றி கிடைக்கும் இனிய நாளாக இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்சனைகளை பற்றி சிந்திக்காமல் குடும்பத்தை கவனிப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் தன லாபம் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை சமாளிக்க வழிகள் பிறக்கும்.

கடகம்

கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை அடைவீர்கள் எனினும் அவசரப்படாமல் பொறுமை காப்பது நல்லது. கிரக அமைப்புகள் சாதகமாக இருப்பதால் நீங்கள் சுப காரிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வீண் பழி மறையும் இனிய நாளாகும். உங்கள் பேச்சுக்கு மற்றவர்கள் செவி சாய்பாபார்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நேர்மை தேவை.

சிம்மம்

சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முயற்சிகள் பலிதம் ஆகும் இனிய நாளாக இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து நற்பெயர் கிடைக்கும். கூட்டுத் தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

கன்னி

கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரும் இனிய நாளாக இருக்கிறது. எதிலும் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நீங்கள் விரும்பிய பொருட்களை வாங்கி குவிக்கும் வாய்ப்புகள் உண்டு. உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்கிற ஏக்கம் தீரும் வழிகள் பிறக்கும்.

துலாம்

துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுபகாரியம் முயற்சிகளில் மனம் நிறைந்து காணப்படும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகளை பெறுவீர்கள். காத்திருந்ததற்கான பலன் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நீங்கள் எதையும் சுற்றி வளைக்காமல் நேரடியாக பேசி விடுவது நல்லது.

விருச்சிகம்

விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். காலம் உங்களுக்கான பதிலை தேடி தரும், அதுவரை பொறுமை காப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு ஏற்றம் தரும் அமைப்பாக இருப்பதால் லாபத்திற்கு குறைவிருக்காது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளிடம் இருந்து வந்த தவறான புரிதல் மாறும். ஆரோக்கியம் மேம்படும்.

தனுசு

தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிறப்பான நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த உங்களைப் பற்றிய தவறான கணிப்பு மாறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை தேவை. நீங்கள் அடைய வேண்டியது கைக்கு எட்டிய தூரத்தில் இருக்கும் எனவே அவசரம் வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முடிவுகள் எடுப்பதில் குழப்பங்கள் நீடிக்கும் எனவே பொறுமை தேவை.

மகரம்

மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் பல தடைகளை தாண்டி செல்லக்கூடிய நாளாக இருக்கிறது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்ற மனநிலை நீடிக்கும். சுப காரிய முயற்சிகளில் காலதாமதம் ஏற்படும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தன லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பேச வேண்டிய இடத்தில் பேசாமல் விட்டுவிட்டால் பிறகு வருத்தப்பட நேரிடும்.

கும்பம்

கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்ய வேண்டாம். எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். விட்டு சென்ற உறவுகள் தானாகவே வந்து சேர வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் குறையும். சுய தொழிலில் உள்ளவர்கள் பங்குதாரர்களுடன் இருக்கும் மன கசப்புகளை பேசி தீர்த்துக் கொள்வது நல்லது.

மீனம்

மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திடீர் நன்மைகள் நடக்கும் இனிய நாளாக இருக்கிறது. வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான விஷயத்தில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்புகள் வரும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் உங்களை சுற்றி இருக்கும் சூழ்ச்சி வலையை கிழித்து எரிந்து காட்டுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தேவையான ஓய்வு மனோ பலத்தை கொடுக்கும்.