கடவுளின் கைகளில் கட்டப்பட்ட பாலம்! அந்தரத்தில் நிற்கும் அதிசயம்.. தீயாய் பரவும் புகைப்படம்

490

வியட்நாமில் கட்டப்பட்டு இருக்கும் ”காவ் வாங்க் கோல்டன்” பாலம் தற்போது உலகம் முழுக்க வைரலாகி இருக்கிறது.இந்த பாலம் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் ஆகி இருந்தாலும் தற்போது இந்த பாலம் வைரலாக முக்கிய காரணம் இருக்கிறது. இந்த பாலத்தை தாங்கி பிடிப்பது போல, பெரிய இரண்டு கைகள் கட்டப்பட்டு இருக்கிறது.

இதனால் இந்த பாலம் கடவுளின் கைகள் கொண்ட பாலம் என்று அழைக்கப்படுகிறது. இதனால் இந்த பகுதி உலகம் முழுக்க வைரலாகி உள்ளது.வியட்நாமில் டானாங் அருகில் இருக்கும் பானா மலை பகுதியில் உள்ள காவ் வாங்க் கோல்டன் பாலத்தில்தான் இந்த கடவுளின் கைகள் கட்டப்பட்டு இருக்கிறது.

இரண்டு கைகள் விரிந்து வந்து பாலத்தை தாங்கி பிடிப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு கைகளும் அங்கு இருக்கும் மலையில் இருந்து வருவது போல கான்கிரீட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது.தற்போது அங்கு கைகள் இணைக்கப்பட்டு இருப்பதால் அதிக பயணிகள் குவிகிறார்கள். கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அங்கு பயணிகள் குவிந்து வருகிறார்கள்.