தோலில் இப்படி இருந்தால் அலட்சியம் வேண்டாம்: காரணம் என்ன?

1861

தோலில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் வெள்ளை வெள்ளையாக சிறுசிறு புள்ளிகள் உண்டானால் அது சாதாரண மாற்றம் அல்ல. அது தோல் பிரச்னையின் அறிகுறியாக கூட இருக்கலாம்.

இந்த மாற்றம் கழுத்து, தோள்கள், மேல் முதுகு, தாடை மற்றும் முன் கைகள் ஆகிய இடங்களில் பெரும்பாலும் காணப்படும். அதிலும் சில வெண் புள்ளிகளின் வெண்மையான செதில் தோலில் மூடிய பழுப்பு நிற புள்ளியாக உருமாறும்.

இந்த வகை வெண் புள்ளிகள் அரிப்பை உண்டாக்கும். தோலின் மீது வெண் புள்ளிகள் ஏற்பட பல சாத்தியமான காரணங்கள் உள்ளது.

தோலின் பல பகுதிகளில் வளரும் வெள்ளை திட்டுகள் வழக்கமாக விட்டிலிகோவால் ஏற்படுகிறது. அதாவது விட்டிலிகோ என்பது மெலனின் என்றழைக்கப்படுகிறது.

இது பொதுவாக மெலனோசைட்டுகள் என்று அழைக்கப்படும் செல்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.

மெலனோசைட்டுகள் அழிவதால் நிறமிழப்பு ஏற்படுகிறது, இந்த விட்டிலிகோவால் பாதிக்கப்படும் போது தோல் மீது வெள்ளை புள்ளிகள் வெளிப்படும். உடல் பாகங்கள் மற்றும் தோல் மடிப்புகள் உள்ள பகுதிகளிலும் வெண் புள்ளிகள் வெளிப்படும்.

ஏற்கனவே காயம்பட்ட பகுதிகள், உடல் திறப்புகளை சுற்றியுள்ள தோல் பகுதி முடி மற்றும் கண் இமைகள் மீதும் வெண்புள்ளிகள் தோன்றும்.

தோலில் ஒருமுறை வெண் புள்ளிகள் உருவாகி விட்டால் ,தோல் மீண்டும் அதன் சாதாரண நிறத்திற்கு திரும்பாமலும் போகலாம்.

வெண்புள்ளிகள் வர காரணம் என்ன?

தோல் மீது வெண்புள்ளிகள் ஏற்படுவதற்கு ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இருக்கலாம்.
கால்சியம், விட்டமின் D, மற்றும் E குறைபாடுகள் தோல் மீது வெள்ளை திட்டுகள் தோற்றத்தை ஏற்படுத்தும்.
தேமல் என்றால் என்ன?

தேமல் அல்லது தமல் என்று அழைக்கப்படுகிறது, இது தோல் நிறத்தை பாதிக்கும் மற்றொரு பொதுவான தோல்நோய். நமது தோலில் மஸேசியா என்ற ஈஸ்ட் உருவாகிறது. அது சிறிய எண்ணிக்கையில் சாதாரணமாக இருக்கும்.

ஆனால் சில சமயங்களில் ஈஸ்டின் அதிகப்படியான வளர்ச்சியால் தோலில் சிவப்பு-பழுப்பு நிற புள்ளிகளை உருவாக்கும். ஈரமான, சூடான மற்றும் எண்ணெய் தோல் உடையவர்களுக்கு இந்தப் பாதிப்பு வர அதிக வாய்ப்புள்ளது.

குறிப்பாக இது மேல் கைகள் , கழுத்து, வயிறு மற்றும் தொடைகள் பகுதிகளில் ஈஸ்ட் அதிகரிக்கும் போது தோன்றுகிறது. ஆனால் இது தொற்றுநோய் அல்ல.

தேமல் வர காரணம் என்ன?

சூடான மற்றும் ஈரப்பதமான காலநிலை, அதிகமான வியர்த்தல், எண்ணெய் தோல், ஊட்டச்சத்தின்மை, கர்ப்பகாலம், கார்டிகோஸ்டீராய்டுகள், அல்லது நோய் எதிர்ப்பு திறன் குறைபாடு போன்ற காரணத்தினால் சருமத்தில் தேமல் ஏற்படுகிறது.