பேராசிரியை பதிவிட்ட புகைப்படத்தால் 99 கோடி நஷ்டஈடு : பறிபோன வேலை!!

1088

கொல்கத்தா…..

இந்திய மாநிலம் மேற்கு வங்கத்தில் பிகினி புகைப்படத்தை பதிவிட்ட பேராசிரியைக்கு எதிராக 99 கோடி நஷ்ட ஈடு கோரப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றின் பேராசிரியை தனது இன்ஸ்டாகிராமில் பிகினி அணிந்த புகைப்படங்களை பதிவிட்டதாக புகார் கூறப்பட்டது.

மாணவர் ஒருவரின் தந்தை அளித்த அந்த புகாரில், தனது மகன் பேராசிரியையின் சில புகைப்படங்களை பார்த்துக்கொண்டிருந்தார் என்றும், அந்த படங்களை குறித்த பேராசிரியை ஆபாசமாக உடையணிந்து இருந்தார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார். அதனைத் தொடர்ந்து குறித்த பேராசிரியை மீது துறை ரீதியான நடவடிக்கையாக பல்கலைக்கழகம் அவரை பணிநீக்கம் செய்தது.

மேலும் பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்கு அவர் களங்கம் விளைவித்ததால் 99 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்று கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேராசிரியை கூறுகையில், எனது தனிப்பட்ட கணக்கை யாரோ ஹேக் செய்து அல்லது ஸ்டோரீஸ்-யில் நான் பதிவிட்டத்தை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து பரப்பியிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.