காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு.. பள்ளி மாணவியின் விபரீத முடிவு.. மனதை உருக்கும் கடிதம்!!

932

விழுப்புரம் அருகே..

விழுப்புரம் அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவிததால் குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்துக்குடித்த 12-ம் வகுப்பு மாணவி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் அருகே உள்ள மல்லிகைபட்டு கிராமத்தை சார்ந்த 12-ஆம் வகுப்பு அரசு பள்ளி மாணவி ஒட்டன் காடுவெட்டியை சார்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த பெற்றோர் மாணவியை கண்டித்ததோடு அவருக்கு வேறு இடத்தில் திருமணம் செய்துவைக்க முயற்சி செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த மாணவி இன்று பள்ளி வளாகத்தில் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

அவரை மீட்ட ஆசிரியர்கள் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து அறிந்து பள்ளி வளாகத்திற்கு சென்ற போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது, காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் குளிர்பானத்தில் பூச்சி மருந்தை கலக்கி குடித்துவிட்டு மாணவி பள்ளிக்கு வந்ததாக மாணவி கூறியது தெரியவந்துள்ளது. ஆனால், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு செல்லும் வழிலேயே மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து மாணவி மரணம் தொடர்பாக காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, மாணவி உயிரை மாய்த்துக்கொள்வதற்கு முன்பு எழுதிய கடிதம் ஒன்றை கைப்பற்றியுள்ளனர்.

அதில், “தான் காதலித்த அந்தோனி செல்வராஜ் மாமாவை விட்டு பிரிவதாகவும், மிஸ் யூ மாமா என்று கண்ணீருடன் எழுதி வைத்துள்ளார்.” அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

12-ம் வகுப்பு மாணவி காதலித்தது அதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, இதுபோன்ற விவகாரங்களில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளை பெற்றோர் சரியான முறையில் அனுக வேண்டும் என உளவியல் ஆலோசகர்கள் கூறுகின்றனர்.