‘மிஸ் யூ மாமா’… காதல் எதிர்ப்பால் பள்ளி மாணவி எடுத்த விபரீத முடிவு!!

1032

விழுப்புரம்..

விழுப்புரம் அருகே காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வேறொருவருடன் திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் செய்ததால் பள்ளி மாணவி கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் அருகே உள்ள மல்லிகைபட்டு கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், மாணவிக்கு ஒட்டன் காடுவெட்டியை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார்.

இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவரவே மாணவியை கண்டித்து உறவுக்கார மாப்பிள்ளைக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். இதனால் மனவேதனையில் இருந்த அரசு பள்ளி மாணவி குளிர்பானத்தில் பூச்சி மருந்தை கலந்து குடித்துவிட்டு பள்ளிக்கு சென்றுள்ளார்.

பள்ளிக்குள் நுழைந்த மாணவி திடீரென மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார். உடனடியாக பள்ளியின் ஆசிரியர்கள் மாணவியை மீட்டு விசாரனை செய்தபோது தான் ஒருவரை காதலிப்பதால் பெற்றோர்கள் தனக்கு திருமண ஏற்பாடு செய்வதாகவும் அது பிடிக்காமல் மருந்து குடித்துவிட்டதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து பள்ளி மாணவியை மீட்டு அருகிலுள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் ஆசிரியர்கள் அனுப்பி வைத்தனர்.

அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து பள்ளி ஆசிரியர்கள் காணை போலீசாருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் விரைந்து சென்ற போலீசார் பள்ளியில் விசாரணை நடத்தி மாணவி எழுதிய கடிதத்தை கைப்பற்றினர்.

அந்த கடிதத்தில், தான் காதலித்த அந்தோனி செல்வராஜ் மாமாவை விட்டு பிரிவதாகவும், ”மிஸ் யூ மாமா” என்று கண்ணீருடன் எழுதி வைத்திருந்தது தெரியவந்தது. அதனை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.