11 வயது சிறுமியை 17 பேர் சீரழித்த விவகாரம் : சிறுமி அடுத்து செய்யப்போவது இதை தான்!!

1234

சென்னையில் 17 பேரால் சீரழிக்கப்பட்ட சிறுமி இன்று குற்றவாளிகளின் அடையாள அணிவகுப்பில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை அடையாளம் காட்டுகிறார்.

அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த 11 வயது சிறுமியை லிப்ட் ஆபரேட்டர், காவலாளி உள்ளிட்ட 17 பேர் பலாத்காரம் செய்தனர்.

இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய இச்சம்பவத்தை அடுத்து 17 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட்கள் இருவர் முன்னிலையில் புழல் சிறையில் இன்று குற்றவாளிகளின் அடையாள அணிவகுப்பு நடைபெறுகிறது.

இதில் பாதிக்கப்பட்ட சிறுமி குற்றஞ்சாட்டப்பட்டவர்களை அடையாளம் காட்டுகிறார்.

கொலை, பலாத்காரம் போன்ற தீவிரமான குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கண்டறிவதற்காக அடையாள அணிவகுப்பு எப்போதும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.