எனக்கு இந்தமாதிரிப் படங்களில் நடிக்க ஆசையாக உள்ளது: பிரபல நடிகை அஞ்சலி

813

தெலுங்கு, தமிழ் திரைப்படங்கள் மற்றும் விளாம்பரப் படங்களில் நடிக்கும் நடிகை அஞ்சலி ”கற்றது தமிழ்” என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இவர் தனக்கு விருப்பமான கதாபாத்திரம் குறித்து பேசியுள்ளார்.

அதாவது, என் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ளதா என்பதை பார்த்தே படங்களை தேர்வு செய்து நடிக்கிறேன்.

என்னை தேடி நல்ல கதைகள் வருகின்றது. ஒவ்வொரு படத்திலும் என் நடிப்பை பார்த்துவிட்டு ரசிகர்கள் பாராட்டுகிறார்கள்.

பேய் படங்களில் நடிக்க ஆசையாக உள்ளது. நான் கீதாஞ்சலி என்னும் தெலுங்கு படத்தில் பேயாக நடித்தேன்.அந்த படம் மூலம் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. மேலும் பல பேய் படங்களில் நடிக்க விரும்புகிறேன்.

கீதாஞ்சலி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார்கள். அதிலும் பேயாக வந்து மிரட்டப் போகிறேன் என்று நடிகை அஞ்சலி கூறியுள்ளார்.