இந்த இளம் நடிகைக்கு நிமிடத்துக்கு இத்தனை லட்சம் விலையாம்! அதிரவைத்த தகவல்

1429

சினிமாவில் நடிகைகளின் சம்பளம் நடிகர்களுடன் ஒப்பிடும் போது மிக குறைவு என்றே சொல்லலாம். இந்த பாகுபாட்டை போக்க சிலர் நீண்ட காலமாகவே குரல் கொடுத்து வருகிறார்கள்.

ஆனாலும் சில நடிகைகள் கோடிகளில் அதிக சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால் நடிகைகளில் ஒரு சிலரே பொது நிகழ்ச்சி, விருது விழாக்கள் என பங்கேற்கிறார்கள். அவர்களுக்கு அதற்காக சம்பளமும் கொடுக்கப்படுகிறது.

அண்மையில் வெளியான செம ஹிட்டான தெலுங்கு படம் RX 100. இதில் ஹீரோயினாக நடிகை பயல் ராஜ்புட் நடித்திருந்தார். அவர் அண்மையில் Zee comedy Awards நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனமாடினார்.

இந்நிலையில் அவர் ஒரு நிமிடத்துக்கு அவருக்கு ரூ 1 லட்சம் சம்பளம் பேசப்பட்டதாம். அவர் நிகழ்ச்சியில் 5 நிமிடம் நடனமாடியதால் மொத்தம் ரூ 5 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.