இதை குடிச்சா செலவே இல்லாம பல நோயை குணப்படுத்தலாமாம்!

693

பரவலாக கோமியம் என்று அழைக்கப்படும் மாட்டு சிறுநீரானது, நோய்களை குணப்படுத்தவும், உடல் நிலையை சீராக்கவும் இந்திய மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

ஆயுர்வேத முறையில், நோய்களுக்கான சிகிச்சையில் பசு மாட்டின் கோமியம் பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகிறது. ஆயுள் காக்கும் ஆயுர்வுத மருத்துவத்தில் பசுவின் சிறுநீர் பல்வேறு நோய் தீர்க்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

பாரம்பரிய மருத்துவ முறையில் பல்வேறு கடுமையான நோய்களுக்கும் இது நோய் தீர்க்கும் மருந்தாக பயன்படுகிறது.

கோமியத்தை பால், தயிர் அல்லது வெண்ணெயுடன் கலந்து நோய்களை குணப்படுத்த பயன்படுத்துவர். எயிட்ஸ், புற்றுநோய் போன்ற உயிர்கொல்லி நோய்களை குணப்படுத்த மற்ற மருந்துகளுடன் சேர்த்து கோமியமும் நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது.

ஆய்வறிக்கைகளின் படி கோமியமானது, நோய்களில் இருந்து மீண்டு வர மிகவும் உதவிகரமாக இருக்கிறது. மேலும் இந்தியாவில் மாட்டின் கோமியமானது அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய வகையில் உள்ளது. தற்போது கடைகளில் கிடைக்கும் சோப், சாம்ப், பற்பசை மற்றும் குளிர்பானம் போன்ற சில பொருட்களில் கோமியம் கலந்துள்ளது.

சிறுநீரில் டாக்சிக் பொருட்கள் இருக்கிறது என்பது பரவலான கருத்தாக இருந்தாலும், கோமியத்தில் யூரியா, தாதுசத்துக்கள், உப்புகள், ஹார்மோன்ஸ், என்சைம்ஸ் போன்றவற்றுடன் 95% தண்ணீரும் உள்ளது. என்னதான் கோமியத்தின் மூலம் பல்வேறு நோய்கள் குணபடுத்தப்பட்டாலும், அது இன்னமும் விவாதப்பொருளாகத்தான் உள்ளது.

கோமியத்தில் நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. இதன்மூலம் நோய் பரப்பும் கிருமிகளை கொல்லும் ஆற்றல் கொண்டது. ஆயிர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வாதம், பித்தம் மற்றும் கபம் எனப்படும் உடலின் சமநிலையில்லா தன்மையை குணப்படுத்தவல்லது கோமியம்.

இது உடலில் உள்ள குறைபாடுகளை நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் பயன்படுகிறது.

புற்றுநோய், நீரிழிவு, மூளை மற்றும் இதய பிரச்சனைகள், சரும பிரச்சனைகள், தொழுநோய், வலிப்பு போன்ற பல்வேறு நோய்களுக்கு கோமியம் சிறந்த பலனளிக்ககூடய மருந்தாக உள்ளது.மேலும் காய்ச்சல், அனிமியா, நுரையிரல் மற்றும் செரிமான பிரச்சனைகளுக்கும் பயன்படுகிறது.

எதுவாயினும், இந்த சிகிச்சை சுற்றுசூழலுக்கும், நம் பொருளாதாரத்திற்கும் மிகவும் உகந்தது. தற்போது நடந்து வரும் அறிவியல் ஆய்வுகளின் மூலம் இதுபோன்ற கோமியத்தின் பல சிறப்புகள் வெளிவரலாம்.