டிவி விளம்பரத்தில் நடித்த பிரபல நடிகரின் மனைவி! வறுத்தெடுத்த ரசிகர்கள்

120

முன்னணி பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூரின் மனைவி மீரா ராஜ்புட். அவர் சினிமா பின்னணியி ல் இருந்து வரவில்லை என்றாலும் இந்த ஜோடிக்கு பாலிவுட்டில் ரசிகர்கள் மிக அதிகம்.

இந்நிலையில் சமீபத்தில் மீரா ராஜ்புட் ஒரு டிவி விளமபரத்தில் நடித்துள்ளார். இதன் மூலம் அவர் நடிப்பு திறமையை உலகத்திற்கு வெளிக்காட்டுவர் என ரசிகர்கள் காத்திருந்தனர்.

ஆனால் அவரின் முதல் விளம்பரம் வெளியானதும் ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுக்க ஆரம்பித்துவிட்டனர். அவர் மோசமாக நடித்திருந்தது காரணமாக இருந்தாலும், அந்த விளம்பரத்தில் கெமிக்கல்களால் செய்யப்பட்ட அழகு பொருட்களை அவர் விளம்பரப்படுத்தியுள்ளதும் விமர்சனத்திற்குள்ளானது.

“நான் இயற்கையான அழகு சாதன பொருட்களை தான் பயன்படுத்துவேன்” என முன்பு ஒரு பேட்டியில் அவர் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.