5 வருஷமா குழந்தை இல்லை.. சண்டை போட்ட அக்கா கணவருக்கு மச்சானால் அரங்கேறிய பயங்கரம்!!

1022

வாலாஜாப்பேட்டை…….

வாலாஜாப்பேட்டை அருகே கச்சாலநாயக்கர் தெருவை சேர்ந்தவர் அசோகன்(32). இவருக்கும் அதே தெருவை சேர்ந்த விஜயலட்சுமி என்பவருக்கும் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன.

இந்த நிலையில் ஐந்து ஆண்டுகளாக இருவரும் குழந்தை இல்லாததால், இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஏற்பட்ட சண்டையில் கருத்து வேறுபாடு காரணமாக விஜயலட்சுமி தனது அம்மா வீட்டுக்கு சென்றிருந்தார்.

பல மாதங்களுக்கு பின்பு தனது மனைவி விஜயலட்சுமியை மீண்டும் சேர்ந்து வாழ அழைப்பதற்காக, அசோகன் விஜயலட்சுமியின் வீட்டிற்கு சென்றார். அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த விஜயலட்சுமியின் தம்பி மணி, தனது வீட்டில் இருந்த கத்தியால் அக்காவின் கணவரான அசோகனை சரமாரியாக வெட்டி கொலை செய்ய முயன்றுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அசோகனை மீட்ட அக்கம் பக்கத்தினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வாலாஜாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அசோகனை கத்தியால் வெட்டிய மணி(எ)விஜய குமாரை வாலாஜாபேட்டைபோலீசார் தேடி வருகின்றனர். அக்காவின் கணவரை சொந்த மச்சானே வெட்டி படுகொலை செய்ய முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.