பீச்சில் மிதந்த தலை…. தமிழகத்தை உலுக்கிய கொடூர கொலை!!

1304

சென்னை…..

கோவையில் துண்டு துண்டாக உடலை வெட்டி சாய்த்துள்ளார் ஒரு இளம்பெண்.. இந்த கொலை நடந்து 2 நாட்கள் கடந்தும் அதிர்ச்சி இன்னமும் விலகவில்லை.. அத்துடன், 1952 ல் நடைபெற்ற ஆளவந்தார் கொலையை போலவே இந்த கொலையும் நடந்துள்ளதாக ஒப்பிட்டு பேசப்பட்டும் வருகிறது.

ஆளவந்தார் கொலை என்றால் என்ன? யார் அந்த ஆளவந்தார் என்பதை பற்றி முன்னுரையை பார்ப்போம். 1950களில் பேசப்பட்ட கொலை வழக்கு இது… தமிழகத்தில் நடந்த பிரபலமான முதல் கொடூர கொலை இது என்பதால், மிகப்பெரிய அதிர்வலையையும் மக்களிடம் இந்த வழக்கு ஏற்படுத்தியிருந்தது.

எத்தனையோ கொலைகள் நடந்தாலும், இந்த கொலை இன்றும் பேசப்பட முக்கிய காரணம், இந்த வழக்கில், தடயவியல் துறையில் போலீஸார் கையாண்ட விதம்தான் என்பதை மறுக்க முடியாது.

952-ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம், சென்னை எழும்பூரிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயிலில் திடீரென துர்நாற்றம் வீசியது.. இந்த விஷயம் போலீசுக்கு தெரிந்து விரைந்து வந்து, சம்பந்தப்பட்ட பெட்டியை சோதனை செய்தனர்.. அங்கே ஒரு டிரங்க் பெட்டி கிடந்தது.. அதை திறந்து பார்த்தால், ஆண் ஒருவரின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்ட கிடந்தது.. ஆனால், தலையை காணோம். வெறும் உடலை மட்டுமே வைத்து, கொலையுண்டவர் யார் என்று தெரியவில்லை.. அதனால் போலீசார் துப்பு கிடைக்காமல் திணறினார்கள்..

உடனடியாக இந்த சடலம், மதுரை தடயவியல் நிபுணர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது… மற்றொருபுறம், இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்கு முன்பு, சென்னை சென்னை எஸ்பிளனேட் ஸ்டேஷனில், கணவரை காணவில்லை என்று ஒரு பெண் புகார் தந்திருந்தார்.. அவர் பெயர் ஆளவந்தார்.. 42 வயது.. ராணுவத்தில் பணியாற்றி ரிடையவர் ஆனவர்.. பர்மா பஜாரில் சொந்தமாக பிளாஸ்டிக் பொருட்கள் கடை வைத்திருந்தார். இவர் கொஞ்சம் சபலபுத்தி உடையவராம்.. பெண்களை கவர் செய்வதற்காகவே, தவணைமுறையில் சேலை விற்பனையும் செய்து வந்தார்…

இவரை தேடும் முயற்சியில் போலீசார் இறங்கியபோதுதான், ராயபுரத்தைச் சேர்ந்த தேவகி என்கிற பெண்ணுடன் ஆளவந்தாருக்கு தொடர்பு இருப்பது என்று தெரியவந்துள்ளது.. தேவகி வீட்டுக்குத்தான் இவர் கடைசியாக சென்றுள்ளதும் கண்டறியப்பட்டது. அந்தசமயத்தில், ராயபுரம் பீச்சில், ஒரு பொட்டலம் மிதந்து வந்து விழுந்தது.. அதில் ஒரு ஆணின் தலை மட்டும் கிடப்பதை கண்டு பொதுமக்கள் அலறியடித்து ஓடினார்கள்.. அந்த தலையை வைத்து மதுரைக்கு அனுப்பப்பட்ட உடலை பொருத்தி பார்த்தனர்.. இரண்டுமே சரியாக பொருந்திய நிலையில், இறந்தவர் ஆளவந்தார் என தெரியவந்தது.. ஆளவந்தரின் மனைவியும் அதை உறுதி செய்தார்…

சடலம் கிடைத்தாலும், சம்பந்தப்பட்ட தேவகி கிடைக்கவில்லை.. தலைமறைவாகி இருந்தார்.. அவருடன் அவரது கணவரும் சேர்ந்து எஸ்கேப் ஆகியிருந்ததால், போலீசார் சந்தேகம் அவர் மீது குவிந்தது.. அதனால் அவர் போட்டோவை வெளியிட்டு, அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என்று பொதுமக்களிடம் கோரிக்கை வைத்தனர்.. இதையடுத்து, தேவகியும் அவரது கணவன் பிரபாகரனும் தாங்களாகவே வந்து சரணடைந்தனர்… தம்பதிகளிடம் விசாரணை ஆரம்பமானது.. கள்ள உறவு பிரபாகரனுக்கு தெரிந்ததால், ஆளவந்தாரையும் தேவகியையும் கண்டித்துள்ளார்.. ஆனால், ஆளவந்தார் தேவகியை விட்டுத்தர தயாராக இல்லை..

எனவேதான், ஆளவந்தாரை போட்டுத்தள்ள தம்பதி இருவரும் முடிவு செய்தனர்.. வீட்டுக்கு நாசூக்காக பேசி ஆளவந்தாரை தேவகி வரவழைத்தார்.. பாலில் மயக்க மருந்து தந்து, மயங்கிவிழ செய்தார்.. பிறகு, கணவர் பிரபாகருடன் சேர்ந்து ஆளவந்தாரைக் கொன்று உடலை அடையாளம் தெரியாத அளவுக்கு துண்டு துண்டாக வெட்டிவிட்டார்… பிறகு கடைக்கு சென்று ஒரு பெரிய டிரங்க் பெட்டியை வாங்கி வந்து , உடலை போட்டனர்.. தலையை மட்டும் தனியாக கட்டி, ராயபுரம் கடலில் தூக்கி வீசினர்.. பிறகு உடலை கொண்டு செல்ல, ஒரு ரிக்‌ஷா வரவழைக்கப்பட்டு, அதில் டிரங்க் பெட்டியை ஏற்றி எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனில், ஒரு கம்பார்ட்மென்ட் அடியில் போட்டுவிட்டு, 2 பேரும் வீட்டுக்கு வந்துள்ளனர்.

கணவனுக்கு 7 வருடம், தேவகிக்கு 3 வதுடம் ஜெயில் தண்டனை கிடைத்தது.. இந்த கொலையை வைத்து நாவல்கள் எழுதப்பட்டுள்ளன.. டிவி நாடகமும் வெளிவந்துள்ளது.. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இப்படி ஒரு பச்சை படுகொலையை சென்னைவாசிகள், ஏன் தமிழகமே கண்டதில்லை.. அப்போதைக்கு இருந்த ஒரே ஒரு சோர்ஸ் பத்திரிகைகள் மட்டும்தான்.. “ஆளவந்தார் தலை கிடைத்ததே, உடல் கிடைத்தா?” என்று தினமும் பத்திரிகைகளில் அப்போதெல்லாம் செய்திகள் வருமாம்.. “அந்த உடல் எங்கே இருக்கும்?” என்று பொதுமக்களே கூட்டமாக நின்று கேள்வி எழுப்பி கொண்டிருப்பார்களாம்.

போதுமான அளவுக்கு அறிவியல் வளர்ச்சிகளும் இல்லாத காலகட்டத்தில், போஸ்ட்மார்ட்டம், தடயவியல் பரிசோதனை போன்றவைகள் எல்லாம் மக்களுக்கு அப்போது புதிதாக இருந்தது.. எத்தனையோ தடவியல்துறை வழக்குகளுக்கு இந்த கேஸ்தான் முன்மாதிரியானது.. இப்போதும் கோவை சம்பவத்தில் இந்த கொலையை சம்பந்தப்படுத்தி பார்க்க காரணமே, கொலை செய்யப்பட்ட கோர விதம்தான்.. ஆளவந்தார் வழக்கு 3 வருடம் நடந்தது என்றாலும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைத்தது.. அந்தவகையில், இளைஞரை கொன்ற பெண்ணுக்கும் தண்டனை கிடைக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்..!