வாவ்.. சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நடிகை வித்யா-வா இது..? வாயை பிளந்த ரசிகர்கள்!!

6211

வித்யாவினு மோகன்..

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அபியும் நானும் என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் நடிகை வித்யா வினு மோகன் சீரியலில் குடும்ப பாங்காக சீரியலில் தோன்றும் இவர் மாடர்ன் உடைகளில் ரசிகர்களுக்கு கவர்ச்சி தரிசனம் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்திய ஒரு பேட்டியில் பேசிய அவர் நான் மூன்று மொழிகளில் பல படங்களில் ஹீரோயினாக நடித்து இருக்கிறேன்.

ஆனால் அப்போதெல்லாம் எனது கிடைக்காத பிரபலம் அபியும் நானும் என்ற ஒரே சீரியலில் நடித்ததன் மூலம் எனக்குக் கிடைத்திருக்கின்றது என்றார். இந்த சீரியலில் இவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது எனக்கு கிடைத்த பாக்கியம் என்று கூறுகிறார். வித்யா வினு மோகன். இவருடைய சொந்த ஊர் கேரள மாநிலம் கோட்டயம்.

இவர் ஒரு மலையாள நடிகை ஆவார். அப்பா வங்கி அதிகாரி. சிறுவயதிலிருந்தே சினிமாவின் மீது ஆர்வம் கொண்டிருந்த இவர் மாடல் அழகியாக தன்னுடைய பயணத்தை தொடர்ந்தார். அதன்படி விளம்பரப் படங்களில் நடித்துக்கொண்டிருந்த இவருக்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.வித்யாவினு மோகன் மலையாளத்தில் முதன்முதலாக சீதா கல்யாணம் என்ற திரைப்படத்தில் நடித்த இவருக்கு வரிசையாக படங்கள் கிடைத்தன.

கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் சீரியல் பக்கம் ஒதுங்கினார். இவருடைய கணவரும் ஒரு நடிகர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் சன் டிவியில் வெளியான வள்ளி என்ற சீரியலில் நடித்து தமிழ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர். தொடர்ந்து அபியும் நானும் என்ற சீரியலில் நடித்தார். இந்த சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு சொல்லிக்கொள்ளும்படி ரசிகர் பட்டாளமும் உருவானது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் இளம் நடிகர்களுக்கு இணையான கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றது. இதனை பார்த்த, ரசிகர்கள் சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் வித்யாவா இது..? என்று வாழ்ந்து வருகின்றனர்