சக மாணவன் கொடுத்த குளிர்பானத்தை அருந்திய சிறுவன்…. இரண்டு சிறுநீரகங்களும் செயலிழப்பு : விசாரணையில் தெரிந்த உண்மை!!

1163

கன்னியாகுமரி……

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மெதுகும்மல் நுள்ளிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுனில். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், அவரது மகன் அஸ்வின்(11) அதங்கோடு தனியார் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 24ஆம் திகதி தேர்வு எழுதிவிட்டு வந்த அஸ்வின், மறுநாள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து சிறுவனின் தாயார் ஷோபியா மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றுள்ளார்.

ஆனால் அதற்குள் அஸ்வினுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் பதறிய ஷோபியா, கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அஸ்வினை அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுவன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்தபோது அவர் குடித்த குளிர்பானத்தில் ஆசிட் திரவம் கலந்திருந்தது தெரிய வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அதன் தாக்கத்தினால் சிறுவனின் இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் குறித்து சிறுவன் அஸ்வினின் தாயாரிடம் விசாரித்தபோது, தேர்வு எழுதிவிட்டு கழிவறையில் இருந்து திரும்பும் வழியில் அடையாளம் தெரியாத மாணவன் ஒருவன் குளிர்பானம் கொடுத்துள்ளார்.

அதனை குடித்த பின்னர் தான் சிறுவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டதாகவும், பயத்தினால் இந்த விடயத்தை முதலில் அஸ்வின் மறைத்ததாகவும் கூறியுள்ளார். இதுதொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

படிப்பில் ஏற்பட்ட போட்டி காரணமாக சிறுவனுக்கு ஆசிட் கலந்த குளிர்பானம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.