ஆள் அடையாளமே தெரியாம மாறிபோன நடிகை அதுல்யா ரவி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

1428

அதுல்யா ரவி..

நடிகை அதுல்யா ரவி தற்போது எண்ணித்துணிக, சடலம், வட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படங்கள் விரைவில் திரைக்கு வரவிருக்கின்றது. தற்போது தெலுங்கு சினிமாவிலும் கால்பதிக்க தயாராகி வருகிறார் நடிகை அதுல்யா ரவி. ஆனால் தன்னுடைய முகத்தை அழகாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டிருக்கும் இவரது முகம் அப்படியே மாறி வேறு ஆள் போல சில நேரங்களில் காட்சியளிக்கிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் அதுல்யா ரவியா இது..? என்று வாயை பிளந்து வருகிறார்கள். தற்போது புஷ்பா படத்தின் தயாரிப்பாளர் தயாரிக்க உள்ள புதிய தெலுங்கு படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் நடிகர் அதுல்யா ரவி என்ற விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் தெலுங்கிலும் கதை கேட்க ஆரம்பித்துள்ளார்

என்றும் படவாய்ப்புகள் எந்த மொழியில் வந்தாலும் ஏற்றுக் கொள்வது என்றும் முடிவு எடுக்கிறார். தமிழில் இவருக்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை வாய்ப்பு வந்தாலும் இவரை ஒரு கவர்ச்சி நடிகையாக மட்டுமே காட்சிப்படுத்த முயற்சிகள் நடக்கிறது. அந்த வகையில் ஏமாளி, முருங்கைக்காய் பீன்ஸ் உள்ளிட்ட படங்களில் இவரை ஒரு கிளாமர் பொம்மையாகவே பயன்படுத்தினார்கள். இவருடைய நடிப்புக்கு பெரிய அங்கீகாரம் இருப்பதாக தெரியவில்லை.

தன்னுடைய கவர்ச்சியை மட்டுமே மூலாதாரமாகக் கொண்டு சினிமாவில் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை அதுல்யா ரவி. தன்னுடைய முகத்தை அலங்கரிக்கிறேன் என்று சிகிச்சை மேற்கொண்டு தற்போது விகாரமாக இருக்கும் இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்க்கும்போது இது நிஜமாவே இது அதுல்யா ரவியா..? என்று சந்தேகம் எழுவதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் பொழுது சில நேரங்களில் இப்படி தவறான முடிவுகளும் வந்து விடும் முக அழகு மாறிவிடும் என்றும் விவரம் அறிந்தவர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். பட வாய்ப்புக்காக முகத்தை அழகாக இருக்கிறேன் என்ற பேர்வழியில் நடிகை அதுல்யா ரவி தன்னுடைய அடையாளத்தை இழந்து வேறு ஒருவர் போல் காட்சி அளிக்கிறார் என்று ரசிகர்கள் பலரும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.