அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்திய குடும்பம்.. தேடிய போலிஸாருக்கு இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி!!

961

அமெரிக்காவில்..

அமெரிக்காவில் இந்தியர்களுக்கு எதிரான மனைநிலை அதிகரித்து வருவது கவலை அளிக்கக்கூடியதாக விளங்கி வருகிறது. இனரீதியாக இந்தியர்கள் விமர்சிக்கப்படுவதும் அங்கு அதிகரித்து வந்தது.இந்த நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் இந்திய குடும்பத்தினர் கடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு கரோலினாவின் மெர்சட் கவுன்டியில் வசிக்கும் 8 மாதக் குழந்தை அரூஹி தேரி, அவரது பெற்றோர் ஜஸ்லீன் கவ்வுர் (27) அவரது கணவர் ஜஸ்தீப் சிங் (36), இவர்களது உறவினர் அமன்தீப் சிங் (39) ஆகியோர் மர்மநபர்களால் கடத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலிஸார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில், காணாமல் போன 4 பேரின் சடலமும் இண்டியானா சாலை மற்றும் ஹட்ச்ஹின்சன் சாலை ஒட்டிய ஒரு பகுதியில் மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கடத்தல் தொடர்பாக ஜீஸஸ் மேனுவல் சால்கடோ என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்டவர்கள் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை பூவிகமாக கொண்ட சீக்கிய மதத்தை சேர்ந்தவர்கள். இந்த சம்பவம் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.