12 வயது சிறுமியை தாயாக்கிய நபர் : பிரசவம் என்றால் என்னவென்று தெரியாமல் பயந்து அலறிய சோகம்!!

878

12 வயது சிறுமியை..

குப்பை கொட்டுமிடத்தில் வாழும் ஒரு சிறுமியை கர்ப்பமாக்கிய ஒரு நபரை பொலிசார் தேடி வரும் நிலையில், பிரசவ வலி என்றால் என்ன என்று தெரியாத அந்த சிறுமி பயத்தில் அலறிய சம்பவம் உக்ரைனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைனின் Rivne என்ற பகுதியில், நகரின் குப்பை கொட்டும் பகுதியில், குப்பைக்கூளங்களுக்கு மத்தியில் வசித்து வரும் ஒரு சிறுமிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவுப்படி பெயர் வெளியிடப்படாத அந்த 12 வயது சிறுமி, தனக்கு என்ன நேரிடுகிறது, ஏன் இடுப்பு வலிக்கிறது என்பது புரியாமல் பயத்திலும், பிரசவ வலியிலும் கதறி அழ, அப்பகுதியில் குப்பைகளுக்கு காவலாக இருக்கும் பணியாளர் ஒருவர் ஆம்புலன்சை அழைத்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுமி, சுமார் 10 மணி நேரம் வலியால் துடித்தபின்னரே குழந்தை பெற்றுள்ளார். அந்த சிறுமிக்கு 12 வயதே ஆனதால், அவளுக்கு பிரசவம் பார்ப்பது மருத்துவர்களுக்கும் மிகவும் கடினமாக இருந்த நிலையில்,

அவளுக்கு பிரசவம் பார்த்த ஒரு மருத்துவர், குழந்தை ஒன்று குழந்தை பெற்றெடுத்ததைப் பார்த்த அதிர்ச்சியில் இருந்து தான் இன்னும் மீளவில்லை என்கிறார்.

குப்பை கூளங்களுக்கு மத்தியில் வாழ்ந்ததால் அவளது உடல் மிகவும் அழுக்காக இருந்ததாக தெரிவித்துள்ள மருத்துவர்கள், இதற்கிடையில், தங்கள் மகளையும் குழந்தையையும் தங்களுடன் அதே குப்பை கூளங்களுக்கு நடுவிலுள்ள குடிசைக்கு அனுப்புமாறு அவளது உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளதற்கு சம்மதிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் சம்பவம் குறித்து பொலிசாருக்கு மருத்துவர்கள் தகவலளித்துள்ளனர். சிறுமியை தாயாக்கிய 20 வயது இளைஞன், தற்போது Zakarpatia என்ற பகுதியில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

உக்ரைனைப் பொருத்தவரையில் பா லுறவுக்கு சம்மதிக்கும் வயது 16 என்பதால், 16 வயதுக்குட்பட்ட ஒரு சிறுமியுடன் பா லுறவு கொண்ட அந்த இளைஞர் மீது வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் அவரை தேடி வருகிறார்கள். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 8 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படலாம்.