சூப்பர் ஹீரோ : கையெடுத்து கும்பிட்டு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த கேரள மக்கள்: வைரலாகும் ஒரு புகைப்படம்!!

759

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய மக்களை காப்பாற்றும் பணியில் கடற்படையினர், விமானப்படையினர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பலரும் ஈடுபட்டாலும் மீனவர்களை தங்களது ஹீரோவாக கொண்டாடி வருகின்றனர் அம்மாநில மக்கள்.

அந்த அளவுக்கு தங்கள் படகுகள் மூலம் மக்களை விரைந்து காப்பாற்றி வருகின்றனர், கடலில் இருக்கும் காரணத்தினாலேயே கண்ணிமைக்கும் நேரத்தில் மக்களை காப்பாற்றுகின்றனர்.

கேரள மக்கள் மீனவர்களுக்கு ‘மாநிலத்தின் ஆர்மி’ என்ற பெயர் சூட்டியுள்ளனர். கேரள முதல்வர் மீனவர்களை தங்களின் சொத்து என்றும் அவர்களது சேவை கண்டிப்பாக அங்கீகரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மீனர்வர்கள் ஆற்றிய பணிக்கு அவர்களுக்கு பணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் மீனவர் சங்க தலைவர் பேசியது அவர்கள் மீதான மரியாதையை இன்னும் கூடியிருக்கிறது. அவர் கூறும்போது “ முதலமைச்சர் அவர்களே, கேரளாவின் இராணுவம் என நீங்கள் எங்களை கூறியது போது பெருமைப்பட்டோம், இறுமாப்பாக இருந்தது.

ஆனால் ரூ.3000 கொடுப்பேன் என நீங்கள் கூறியது எங்களை வலிக்கச் செய்கிறது. காசு கொடுப்பீர்கள் என நினைத்தா வந்தோம், கஷ்டப்பட கூடாதே என நினைத்தே வந்தோம் என்று தெரிவித்துள்ளார்.

சமூகவலைதளத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஒரு படம்.

கேரளாவின் செங்கனூர் பகுதியில் தங்களின் மீட்புப்பணிகள் நிறைவடைந்ததும் மீனவர்கள் லாரிகளில் தங்களின் படகுகளை ஏற்றிக்கொண்டு செல்கின்றனர். அப்போது மக்கள் வழி நெடுகிழும் நின்று மீனவர்களுக்குக் கண்ணீர் மல்க நன்றி தெரிவிக்கின்றனர். இந்தப் புகைப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.