இன்றைய ராசிபலன் (12-11-2022) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

1460

இன்றைய ராசிபலன்…

மேஷம்

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். உறவினர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். சிலர் உங்கள்உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். மாறுபட்ட அணுகுமுறையால் முன்னேறும் நாள்.

ரிஷபம்

கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். அழகும் இளமையும் கூடும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மனசாட்சிபடி செயல்படும் நாள்.

மிதுனம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். தேவையற்ற வீண் அலைச்சலும் டென்ஷனும் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் அதிருப்தி உண்டாகும். விழிப்புடன் இருக்க வேண்டிய நாள்.

கடகம்

கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. திடீர் பயணங்கள் மற்றும் செலவுகளால் திணறுவீர்கள். உறவினர்களால் மனஸ்தாபங்கள் வந்துநீங்கும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து செல்லும். போராடி வெல்லும் நாள்.

சிம்மம்

ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவு பெருகும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகள் பலிதமாகும். சிறப்பான நாள்.

கன்னி

சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர் நண்பர்களால் அனுகூலம் உண்டு. நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சாதிக்கும் நாள்.

துலாம்

குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். புண்ணிய ஸ்தலம் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய மாற்றம் ஏற்படும் நாள்.

விருச்சிகம்

சந்திராஷ்டமம் நீடிப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசிய செலவுகள் அதிகமாகும். அவசரப்பட்டு அடுத்தவர்களின் விவகாரங்களில் தலையிட வேண்டாம். யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. பொறுமை தேவைப்படும் நாள்.

தனுசு

தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பாராத நன்மை கிட்டும் நாள்.

மகரம்

கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள்.

கும்பம்

புதிய எண்ணங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். உறவினர் நண்பர்களால் அனுகூலம் உண்டு. ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் நல்ல செய்தி கேட்பீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். கனவு நனவாகும் நாள்.

மீனம்

எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.