கேரள வெள்ளத்தில் சிக்கிய சபரி மலை ஐயப்பன் கோவில் : உயிரை பணயம் வைத்து கிறிஸ்துவ இளைஞர்கள் செய்த செயல்!!

446

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சபரிமலை பம்பா நதியில் வரலாறு காணாத அளவிற்கு வெள்ளம் ஏற்பட்டது.
இதனால் ஐயப்பன் கோவிலில் சில சடங்குகள் நடத்த இயலாமல் போகுமோ என்ற நிலை முதல் முறையாக கடந்த வாரம் ஏற்பட்டது.

நிரபுத்தரி என்னும் ஆண்டிற்கு ஒரு முறை நடக்கும் ஒரு சடங்கிற்கு, நெல் அறுவடை செய்யப்படுவதற்கு முன், யாரும் எடுப்பதற்கு முன் அறுக்கப்படும் நெற்கதிர் பூஜையில் சமர்ப்பிக்கப் பட வேண்டும்.

ஆனால் இந்த வெள்ளம் காரணமாக கோவிலுக்கு செல்வதற்கான அனைத்து வழிகளும் பாதிக்கப்பட்டன.

காட்டாற்று வெள்ளமாக ஓடும் பம்பா நதியைக் கடப்பது கடினம் என்பதாலும், மலைப் பிரதேசமாகையால் பல நில சரிவுகள் , மற்றும் மரங்கள் சாய்ந்ததால் அனைத்து வழிகள் மறித்ததாலும், காட்டு வழியில் இந்த மழையில், வெள்ளத்தில் நெற்கதிர்களை கொண்டு வரவேண்டும் என்பது போன்ற காரணங்களால், இந்த சடங்கு தடை படுமோ என்ற அச்சம் நிலவியது. ஆனால் இந்த பொறுப்பை கிறிஸ்துவ இளைஞர்களான ஜொபின், குருப், சந்தோஷ், ஜோபி ஏற்றுக் கொண்டனர்.

பல அணைகள் நிரம்பி வழிந்து, பாலங்கள் மூழ்கடித்து, அடங்காமல் ஆர்ப்பரித்து ஓடும் பம்பை ஆற்றில், யாராலும் நீந்தி கடக்க முடியாது என்ற நிலையில் இருந்த பம்பை ஆற்றை எதிர் நீச்சலடித்து, சாக்கு மூட்டையில் கட்டிய நெல் கதிர்களை சுமந்து சென்று உரிய நேரத்தில் கோவிலுக்கு கொண்டு சேர்த்தனர்.

கிருஸ்துவ இளைஞர்கள் 4 பேர் தங்கள் உயிரை பணயம் வைத்து மற்ற மதத்தின் தெய்வம் என பார்க்காமல் தெய்வ நம்பிக்கையை சாஸ்தர சம்பரதாயத்தையும் மதித்து இப்படி ஒரு செயலை செய்திருக்கும் சம்பவம் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.