கோவிலை சூழ்ந்த மழை வெள்ளம்… நனைந்த கோலத்தில் திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதிகள்!!

997

சென்னை….

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் புளியந்தோப்பு பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.

இதனால் அந்த கோவிலில் இன்று நடைபெற இருந்த 5 திருமணங்கள் தாமதமானதுடன் நடைபெற்றது, திருமணத்திற்காக வரிசையில் நின்றிருந்த தம்பதிகள் கோயிலுக்குள் தேங்கி இருந்த தண்ணீரில் நடந்து சென்ற போது முற்றிலுமாக நனைந்தனர். இருப்பினும் இறைவன் அருளோடும், முகத்தில் புன்னகையுடனும் மணமக்கள் மகிழ்ச்சியுடன் திருமணம் செய்து கொண்டார்கள்.

இந்த திருமணங்கள் அனைத்தும் சில மாதங்களுக்கு முன்பு திட்டமிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

முழுவதுமாக ஈரமாகி இருந்த மணமகன் ஒருவர், கோயிலை சுற்றி முற்றிலும் தண்ணீர் தேங்கியுள்ளது, இதனால் நாங்கள் முழுவதுமாக ஈரமாகிவிட்டோம் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறைந்தபட்சம் கோயில் வளாகம் மற்றும் பிற பொது இடங்களையாவது சுத்தம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்.