செங்காந்தள் பூ செடியின் கிழங்கை சாப்பிட்ட இளைஞருக்கு நேர்ந்த சோகம் : எச்சரிக்கை செய்தி!!

1288

திருப்பத்தூர்….

திருப்பத்தூர் மாவட்டம், மின்னூர் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். அதேபோல் நாட்றம்பள்ளி பச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம். இளைஞர்களான இவர்கள் இருவரும் தனியார் கல்குவாரி ஒன்றில் வேலை பார்த்து வருகின்றனர்.

மேலும் இவர்கள் இருவரும் தங்களது செல்போனில் சமூக வலைதளங்களை அதிகமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். அதன்படி சமூகவலைதளம் ஒன்றில் வந்த தகவலில் செங்காந்தள் பூ செடியின் கிழங்கைச் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பெறும் என இருந்துள்ளது.

இந்த தகவலைப் படித்த இருவரும் அதை உண்மை என நம்பி , செங்காந்தள் பூ செடியின் கிழங்கைச் சாப்பிட்டுள்ளனர். பின்னவர் இவர்கள் இருவரும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இவருவரும் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக லோகநாதன் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்குச் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். அதேபோல் ரத்தினத்திற்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.