பிச்சையெடுத்த பணத்தினை கேரளாவுக்கு கொடுத்த பிச்சைக்காரர், தொழுநோயாளிகள்!!

679

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு மத்திய, மாநில அரசுகள், பிரபலங்கள், நிறுவனங்கள், தனியார் அமைப்புகள், பள்ளிகள், கல்லூரிகள், என்றுபோய் தனி நபரும் உதவிகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் உதவிய தனிநபர்களும் உண்டு. அவர்கள் திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள். அவர்களில் சிலர் தொழுநோயாளிகள். மற்றொருவர் பிச்சைக்காரர். மல்லவாடியில் தொழுநோய் இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 2 சிறுவர்கள் இல்லாமல், வயதானவர்கள் மட்டும் 36 பேர் உள்ளனர்.

இவர்கள்தான் கேரள மக்களுக்கு நிவாரண உதவியை தந்துள்ளனர். தாங்கள் சிறுக சிறுக சேர்த்து வைத்த 1035 ரூபாயை, கேரள நிவாரண உதவியாக தந்துள்ளனர். அதேபோல், ஏழுமலை என்பவருக்கு 2 கைகள், ஒரு கால் கிடையாது.

பிச்சை எடுத்துதான் பிழைப்பு ஓட்டிக் கொண்டிருக்கிறார். தான் ஒருநாளில் பிச்சையெடுத்த வசூல் தொகை 100 ரூபாயை நிவாரண நிதியாக கொடுத்துள்ளார்.

தொழுநோயாளிகள் கொடுத்த 1035 ரூபாயும் பிச்சைக்காரர் ஏழுமலை கொடுத்த 100 ரூபாயும் சேர்த்து 1135 ரூபாயாக கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.