பரிஸில் மூடப்பட்ட ஈஃபிள் கோபுரம்: காரணம் என்ன?

1031

பிரான்ஸில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவு காரணமாக, நேற்று புகழ்பெற்ற ஈஃபிள் கோபுரம் மூடப்பட்டிருந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல், பிரான்ஸில் கடுமையான குளிர் மற்றும் பனிபொழிவு ஏற்பட்டது. குறிப்பாக, தலைநகர் பரிஸில் உள்ள ஈஃபிள் கோபுரம் காலையில் திறப்பதற்கு தாமதமானது.

அங்கு -1டிகிரி வரை கடுங்குளிர் நிலவியதால், ஈஃபிள் கோபுரத்தின் மூன்றாவது தளம் முழுவதும் பனிமூட்டத்தால் மூடப்பட்டிருந்தது.

அதன் பின்னர், சுற்றுலாப்பயணிகளுக்காக நண்பகலுக்கு சற்று முன்பாக ஈஃபிள் கோபுரம் திறக்கப்பட்டது. இதற்கு முன்பும் இதேபோல இந்த ஆண்டின் தொடக்கத்தில், கடுங்குளிர் காரணமாக ஈஃபிள் கோபுரம் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.