நடிகை குஷ்பூவுன் மீது பிரபுவிற்கு வந்த காதல் : திருமணம் எப்படி நடந்தது தெரியுமா : சர்ச்சைக்கு மத்தியில் பிரிந்த ஜோடி!!

1262

நடிகை குஷ்பூ இருநூறுக்கும் மேற்பட்ட தென்னிந்திய படங்களில் நடித்தவர். அதில் நூற்றுக்கும் மேற்பட்டவை தமிழ் படங்கள். நாடகங்கள், கேம் ஷோ, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், தொடர்கள் என வெள்ளித்திரை முதல், சின்னத்திரை வரை ஒரு கலக்கு கலக்கிய தைரியமான நடிகை.

எந்தவொரு கருத்தை முன்னெடுத்து வைக்கவும் இவர் என்றும் அஞ்சியதும் இல்லை. கூறிய பிறகு பின் வாங்கியதும் இல்லை.

சிலர் நட்சத்திரங்கள் சில விஷயங்கள் அல்லது சிலர் குறித்த கருத்து தெரிவித்த பிறகு, அதற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்மறை விமர்சனம் எழுந்தால், உடனே என் அக்காவுன்ட் ஹேக் செய்துவிட்டனர் என்று உட்டாலக்கடி வேலை செய்வார்கள்.

ஆனால், தான் கூறிய கருத்துக்கள் தேசிய ஊடகங்கள் வரை தலைப்பு செய்தியாக மாறினாலும் கூட அதை தைரியமாக எதிர்கொள்ளும் மனப்பான்மை கொண்டவர் குஷ்பூ.

குஷ்பூ இந்தி திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். இவரது முதல் திரைப்படம் தி பர்னிங் ட்ரெயின் (1980). என்ற படம் ஆகும். இதை தொடர்ந்து இவர் 1980களில் இருந்து 1985வரை குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்திருந்தார்.

1985ம் அண்டு ஜாவத் ஜெப்ரியுடன் மேரி ஜங் என்ற படத்தில் ஒரு பாடலில் நடனமாடி இருந்தார். போல் பாபி போல், ராக் அன் ரோல் என்ற அந்த பாடல் சூப்பர் ஹிட் ஆனது.

பிறகு, ஜாக்கி ஷெராப் உடன் ஜானூ என்ற படத்தில் முதன் முதலாக முதன்மை நாயகியாக நடித்தார் குஷ்பூ. இதை தொடர்ந்து இந்தி படங்களில் நடித்து வந்தால், திடீர் திருப்பமாக குஷ்பூ புயல் தென்னிந்தியா பக்கம் திரும்பியது.

1986ம் ஆண்டு தெலுங்கில் வெங்கடேஷ் உடன் கலியுக பாண்டவுலு என்ற படத்தில் நடித்த பிறகு, சென்னையில் தங்கி தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார் குஷ்பூ. தபு, ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென் என பலரும் தமிழ் நடித்த போதிலும், இங்கே இந்தியில் இருந்து வந்து ரசிகர்கள் மத்தியில் நிலையான இடம் பிடித்தவர் குஷ்பூ மட்டுமே.

அதற்கு முக்கிய காரணம் அவர் மொழியை கற்பதில் காட்டிய ஆர்வம். யாராலும் குஷ்பூவை வேற்று மாநில பெண் என கூற முடியாத அளவிற்கு, தமிழ் பெண்ணாக கருதும் அளவிற்கு மொத்தமாக மாறினார் குஷ்பூ.

வளர வளர குஷ்பூவின் வாழ்க்கை மற்றும் செயல்கள் என பலவன சர்ச்சைக்குள்ளாகியும் இருக்கின்றன.

திருமணத்திற்கு முந்தைய தாம்பத்தியம் குறித்து குஷ்பூ கூறைய கருத்து மிகப்பெரிய சர்ச்சைக்கு ஆளானது. அவர், பாதுகாப்பான உறவு என்பது அவசியம் என்றும், திருமணத்திற்கு முன்பு உறவு வைத்துக் கொள்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கூறிய கருத்துக்கள் அரசியல் மற்றும் பெண்கள் அமைப்புகள் மத்தியில் இருந்து பெரும் கண்டனங்களுக்கு உண்டானது.

ஒருமுறை இவர் சாமி சிலைக்கு முன் கால்மீது, கால் போட்டு அமர்ந்திருந்ததும், தாலியை ஃபேஷனாக அணிந்து வந்திருந்ததும் கூட சர்ச்சைக்குள்ளாகி கண்டனங்களுக்கு ஆளானது. குஷ்பூ வேறு மதத்தை சேர்ந்தவர் என்பதால், இந்து கடவுளை அவமதிக்கிறார் என மதவாத பிரச்சனைகளையும் கிளப்பினார்கள்.

ஜாக்பாட் என்ற நிகழ்ச்சியை தொடர்ந்து வெற்றிகரமாக ஒன்பது ஆண்டுகளாக நடத்தி வந்தார் குஷ்பூ.

ஒவ்வொரு வாரமும் குஷ்பூ அணிந்து வரும் நகைகள் மற்றும் புடவையை காணவே பெரும் பெண்கள் கூட்டம் அந்த கேம் ஷோவை பார்த்து வந்தது என்று கூறலாம். குஷ்பூ கலைஞர் முன்னிலையில் திமுகவில் இணைய, அந்த நிகழ்ச்சியல் இருந்து நீக்கப்பட்டார் குஷ்பூ.

குஷ்பூ மற்றும் பிரபுவிற்கு திருமணம் ஆனது என்ற ஒரு செய்தி பல ஆண்டுகளாக உலாவி வரும் கதை. பிரபு – குஷ்பூ ஜோடி திரையில் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்ட ஜோடியாகும். இவர்களை ரியல் ஜோடியாக இருந்தால் நல்லா இருக்கும் என ரசிகர்களே கருதினார்கள்.

இவர்கள் இருவரும் திருமணம் செய்துக் கொண்டார்கள் ஆனால், பிரபு வீட்டில் யாரும் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என சில செய்திகளும் பிரபுவும் – தானும் காதலித்தோம், ஆனால் ப்ரேக் -அப் செய்துக் கொண்டோம் என 1996ல் குஷ்பூவே ஒரு ஆங்கிலே நாளேடுக்கு பேட்டி அளித்தார் என்றும் சில செய்திகள் இன்றளவும் இணையங்களில், சமூக தளங்களில் பரவுவதை காண முடிகிறது.

சிலர், பிரபு உடனான ப்ரேக்-அப்க்கு பிறகு தான் சுந்தர் சி’யை காதலித்து குஷ்பூ திருமணம் செய்துக் கொண்டார் எனவும் கூறுகிறார்கள். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

இவர்களது பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார் குஷ்பூ என்பது அனைவரும் அறிந்த செய்தி.