இறந்த கணவரின் உயிரணுக்கள் மூலம் கர்ப்பமான பெண் : இரட்டை குழந்தை பெற்றெடுத்த ஆச்சரியம்!!

264

கேரளாவில் கணவர் இறந்து ஒரு ஆண்டு கழித்து பெண்ணொருவர் அவரது உயிரணு மூலம் இரட்டைப் பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கிறார்.

கண்ணூரை சேர்ந்தவர் சுதாகரன், இவருக்கு ஷில்னாவுடன் கடந்த 2006-ல் திருமணம் ஆன நிலையில் பல ஆண்டுகளாக குழந்தை பிறக்கவில்லை.

இந்நிலையில், 2015 ஆகஸ்ட் 15-ம் திகதி கல்லூரியின் சக பேராசிரியர்களுடன் சுற்றுலா சென்றிருந்தார் சுதாகரன், அப்போது ஏற்பட்ட சாலை விபத்தில் சுதாகரன் உயிரிழந்தார்.

சுதாகரன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள ஷில்னாவும் அவரது உறவினர்களும் விரும்பினர். இதையடுத்து, சுதாகரனின் உயிரணுக்கள் தனியாக எடுத்து பாதுகாக்கப்பட்டது.

பின்னர், அந்த உயிரணுக்கள் மூலம் ஷில்னா கர்ப்பமான நிலையில் மருத்துவமனையில் நேற்று காலை இரட்டைப் பெண் குழந்தைகளை ஷில்னா பெற்றெடுத்துள்ளார்.