அமெரிக்காவில் 13 வயது சிறுமியை 32 வயதான உறவினர் பலாத்காரம் செய்த நிலையில் சிறுமியின் பெற்றோர் அந்த நபருக்கே சிறுமியை திருமணம் செய்து வைத்தார்கள்.
இச்சம்பவம் 33 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணான டவுன் டைரி (46) தற்போது அதை வெளியிட்டுள்ளார்.டைரி கூறுகையில், எனக்கு 11 வயதாக இருக்கும் போது என்னிடம் 32 வயதான என் உறவினர் தவறாக நடந்து கொள்ள ஆரம்பித்தார்.
அவர் தொடர்ந்து என்னை துஷ்பிரயோகம் செய்ததால் 13 வயதில் நான் கர்ப்பமானேன்.இந்த விடயம் என் பெற்றோருக்கு தெரிந்த நிலையில் அவருக்கு சட்டப்படி தண்டனை வாங்கி தராத அவர்கள் விபரீத முடிவை எடுத்தார்கள்.
அதாவது என்னை சீரழத்தவருக்கே என்னை திருமணம் செய்து வைத்தார்கள்.குற்றம் செய்தவர்களுக்கு பொதுவாக கையில் விலங்கு போடுவார்கள், ஆனால் அவர் கையில் மணமாலையை என் பெற்றோர் கொடுத்தார்கள்.
இது போன்ற விடயங்கள் இந்த காலத்திலும் நடப்பது தான் வேதனையாக உள்ளது.ஆனால் எனக்கு நடந்த திருமணம் வெகுகாலம் நீடிக்கவில்லை, எனக்கு 16 வயது ஆகும் போதே அவரை பிரிந்துவிட்டேன்.
இந்த இடைப்பட்ட காலத்தில் இரண்டு குழந்தையை பெற்றெடுத்தேன் என கூறியுள்ளார்.