13 வயது மகளை பாலியல் கொடுமை செய்த தந்தை… பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!!

1128

திருவனந்தபுரம்….

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த தந்தை ஒருவர், 13 வயது நிரம்பிய தனது மகளை 2 வருடமாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதுபற்றிய புக்கர் காவல்துறைக்கு வந்தது. சிறுமி படிக்கும் பள்ளியில், அளிக்கப்பட்ட ஆலோசனையின் போது சிறுமி தனக்கு நேர்ந்த அவலத்தை அங்கிருந்தவர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

உடனே பள்ளி நிர்வாகத்தினர் காவல்துறைக்கு புகாரை அளித்தனர். தீவிர விசாரணையில் இறங்கிய போலீசார், குற்றவாளியான பெண்னின் தந்தையை கைது செய்தனர். அவரின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை திருவனந்தபுரம் மாவட்ட கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் விசாரித்தது. விசாரணை முடிவில் பரபரப்பு தீர்ப்பை வெளியிட்டது.

அதன்படி குற்றவாளியான மாணவியின் தந்தையை சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும் என்று பரபரப்பு தீர்ப்பினை அறிவித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் குற்றவாளி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றவாளிக்கு கீழ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.