ஜூலிக்கு திருமணம் முடிந்துவிட்டதா…மாப்பிள்ளை இவரா? வைரலாகும் புகைப்படம்!!

1291

ஜூலிக்கு திருமணம்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு பிரபலமடைந்த ஜூலி பின்பு கடந்த வருடம் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று பல விமர்சணங்களுக்கு ஆளானார்.

இருந்தபோதிலும், அவருடைய பெயரை சமூக வலைதளங்களில் குறிப்பிட்டாலே ஒருபுறம் ஜூலி வெறியர்கள் என்றும் மறுபுறம் ஓவியா ஆர்மி என்றும் விஜய், அஜித் ரசிகர்கள் போல சண்டையிட தொடங்கி விடுகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வெளியே வந்த ஜுலியை மக்கள் கடுமையாக விமர்சித்தாலும், அவர் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் கிடைத்த பிரபலத்தை வைத்து பிரபலமடைந்து வருகிறார்.

ஆரம்பத்தில் சில விளம்பரங்களில் நடித்து வந்த ஜூலி, தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஓடி விளையாடு பாப்பா என்ற நிகழ்ச்சியில் தொடுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். அது போக உத்தமி, அனிதா எம் பி பி எஸ், அம்மன் தாயி போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் ஜூலி, நடிகர் ஒருவருடன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வந்தது. அதனுடனே, ஜூலி ரகசிய திருமணம் செய்துகொண்டார் என்ற ஒரு செய்தியும் பரவ ஆரம்பித்தது. ஆனால், பின்னர் தான் தெரிந்தது அது படப்பிடிப்பின் போது எடுக்கபட்ட புகைப்படம் என்று.

நடிகை ஜூலி தற்போது அம்மன் தாயி படத்தில் நடித்து வருகிறார் அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அன்பு என்ற புதுமுக நடிகர் நடித்து வருகிறார். அவருடன் இருக்கும் இந்த புகைப்படத்தை தான் தற்போது ஜூலி ரகசிய திருமணம் செய்துகொண்டார் என்ற ஒரு பொய்யான தகவல்கள் வெளியாகி வருவதாக ஜூலி தரப்பினரிடமிருந்து கூறப்பட்டுள்ளது.