அம்ருதா போல் மீண்டும் ஒரு கொடூர சம்பவம் : நடு வீதியில் ரத்தத்துடன் கதறிய புதுமணப்பெண்!!

560

கொடூர சம்பவம்

ஐதராபாத்தில் கலப்பு திருமணம் செய்துகொண்ட தம்பதியினரை, பட்டப்பகலில் கத்தியை கொண்டு தந்தையே வெட்டி கொலை செய்ய முயற்சிக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

ஐதராபாத் மாநிலத்தில் கலப்பு திருமணம் செய்துகொண்டதற்காக கர்ப்பிணி மனைவியின் முன்பே கணவர் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் நடந்தது.

கணவர் பிரணாயை இழந்து அவரது மனைவி அம்ருதா, சமூக வலைதளத்தின் மூலம் கணவரின் கொலை சம்பவத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தி வருகிறார்.

ஒட்டு மொத்த இந்தியாவையே உலுக்கிய இந்த சம்பவம் அடங்குவதற்கு முன்பாகவே மீண்டும் ஒரு கொடூர சம்பவம், ஐதராபாத்தின் Erragadda மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.

உயர் வகுப்பை சேர்ந்த மாதவி (20), கடந்த 5 வருடங்களுக்கு முன்னதாக தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த சந்தீப் (21) என்ற இளைஞரை சந்தித்துள்ளார். பள்ளி பருவத்தில் இருந்தே இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

மாதவி தற்போது நகர்புறத்தில் உள்ள இந்து கல்லூரியில் படித்து வருகிறார். சந்தீப் விவேகானந்தா கல்லூரியில் பி.காம் இரண்டாமாண்டு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த வாரம் தான் கலப்பு திருமணம் செய்துள்ளனர். இதனை அறிந்த மாதவியின் தந்தை மனோகர் சேரி, கடந்த 15-ம் தேதியன்று சந்தீப் வீட்டிற்கு சென்று சென்று மகளை தன்னுடன் அனுப்புமாறு கூறியுள்ளார். அதற்கு குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்து SR நகர் காவல் நிலையத்தில் கூறியுள்ளனர்.

இதனையடுத்து மாதவியின் தந்தையை அழைத்து பொலிஸார் சமாதானம் பேச முயற்சித்துள்ளனர். ஆனால் அதற்கு மனோகர் பிடி கொடுக்காமல் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று கோகுல் தியேட்டர் அருகே உங்களை இருவரையும் சந்திக்க வேண்டும் என மனோகர், மாதவியிடம் கூறியுள்ளார். அவருடைய அழைப்பை ஏற்று மாதவியும் தன்னுடைய கணவனுடன் அங்கு சென்றுள்ளார்.

மதியம் 3.30 மணியளவில் அங்கு வந்து சேர்ந்த மனோகர் திடீரென, பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை கொண்டு சரமாரியாக தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளார்.

இருவரின் அலறல் சத்தம் கேட்டு திரும்பி பார்த்த பொதுமக்கள் உடனடியாக மீட்டு இருவரையும் Sanathnagar பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவத்தில் சந்தீப்பிற்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் மாதவியின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர் தெரிவித்தனர். இதனையடுத்து உயர்மட்ட சிகிசிச்சைக்காக மாதவி யசோதா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவம் தொடர்பாக தற்போது பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.