ஆணவத்தில் ஆடிய தனுஷ் பட நடிகை.. விரட்டி விட்ட இயக்குனர் : தமிழில் பட வாய்ப்பை இழக்க இது தான் காரணமா?

281

அனுபமா..

அனுபமா கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர். அனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் படத்தின் வாயிலாக தான் தென்னிந்திய ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தார்.

அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். அதர்வாவுடன் இணைந்து நடித்த தள்ளிப்போகாதே படம் நிறைய முறை தள்ளித் தள்ளிப் போய் ரிலீசானது. ஆனால் அந்த படம் ரிலீஸ் ஆனது கூட இவருக்கு தெரியாது என்பதுதான் சோகமான தகவல்.

தெலுங்கு ரசிகர்களிடம் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்றால் அவர்களின் ரசனைக்கு ஏற்ப கிளாமருக்கு மாறியாக வேண்டு என்பதை தற்போது புரிந்துள்ளார். இணையத்தில் படு ஆக்டிவாக இருக்கும் அனுபமா பரமேஸ்வரன் அப்போது, தன்னுடைய சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுவார்.

இதனிடையே, அனுபமா பரமேஸ்வரன் சினிமாவிற்கு வந்த ஆரம்பத்தில் பல பட வாய்ப்புகள் வந்ததாகவும், இவரிடம் பிரபல இயக்குனர் ஒருவர் அனுபமாவிடம் கதை சொல்ல சென்றபோது அனுபமா இயக்குனரிடம் இருந்து கதையை கூட கேட்காமல் சம்பளம் அதிகமாக கேட்டதால்,

அந்த இயக்குனர் அங்கு இருந்து வந்துவிட்டாராம். மேலும், சம்பளம் அதிகமாக கேட்டதால் பல இயக்குனர்கள் அனுபமாவிடம் செல்வது இல்லையாம். இதனால் தான் பல பட வாய்ப்புகளை இழந்ததாக பிரபல பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.