மேகத்தை புகைப்படம் எடுத்து அனுப்புங்கள்: மக்களிடம் கோரிக்கை விடுத்த நாசா!!

793

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் மேகங்களை புகைப்படம் எடுத்து அனுப்புமாறு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாசா விண்வெளி மையம் ’Earth Radiant Energy System’ என்ற செயற்கைக்கோளை விண்ணில் அனுப்பியுள்ளது. இந்த செயற்கைகோள், தொடர்ந்து மேகங்களை ஆராய்ந்து காலநிலை எப்படி மாறும் என்று குறிப்பிடும்.

மேலும் அமெரிக்கா மட்டுமல்லாமல் பூமி முழுவதும் தென்படும் மேகங்களை இந்த செயற்கைகோள் ஆராயும்.

ஆனால், இதில் பிரச்சனை என்னவென்றால் மேகங்கள், புகை மற்றும் பனி ஆகியவற்றுக்கான வித்தியாசங்களை இந்த செயற்கைகோளால் அறிய முடியவில்லை.

இதன் காரணமாக செயற்கைகோள் அனுப்பும் ஆராய்ச்சி முடிவுகளில், சில சமயம் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இந்த குறைபாட்டினை சரி செய்ய நாசா மக்களிடம் ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளது.

அதன்படி, மக்களை மேகங்களின் புகைப்படத்தை எடுத்து அனுப்புமாறு நாசா கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

அவ்வாறு மக்களால் அனுப்பப்படும் புகைப்படங்கள், எந்த பகுதியில் எடுத்தது என்றும் நாசாவிற்கு தெரிவிக்க வேண்டும்.

செயற்கைகோள் அனுப்பிய புகைப்படத்தையும், மக்கள் அனுப்பும் புகைப்படத்தையும் வைத்து நாசா சோதனை செய்து கொள்ளும். இதற்காக, ’Globe Observer’ என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நாம் எடுக்கும் புகைப்படங்களை இதில் பதிவேற்றினால், அதனையும் செயற்கைகோள் அனுப்பும் புகைப்படத்தையும் வைத்து நாசா வானிலையில் புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும்.

மேலும், அந்த ஆராய்ச்சிகளின் முடிவுகள் நம்முடைய Mail ID-க்கும் அனுப்பப்படும்.