பள்ளத்தில் கவிழ்ந்த கார்

ஊட்டி அருகே மலைப்பாதையில் 200 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்பட்டுத்தியுள்ளது.

தூத்துக்குடியை சேர்ந்தவர் ஜூட் அண்டோ கெவின் (வயது 34), கப்பல் கேப்டன். இவர் தனது நண்பர்களான சென்னை கொளத்தூரை சேர்ந்த ராமராஜேஷ் (36), வியாசர்பாடி இப்ராகிம் (35), பெரம்பூரை சேர்ந்த அருண் (36), வக்கீல் ரவிவர்மா (39) மற்றும் தொழில் அதிபர்கள் ஜெயக்குமார் (36), அமர்நாத் (35) ஆகியோருடன் ஊட்டிக்கு சுற்றுலா சென்றார்.

கடந்த 30ம் திகதி ஊட்டிக்கு சென்றவர்கள், 1ம் திகதி காலை விடுதியில் இருந்து மசினகுடி பகுதியை சுற்றிப்பார்க்க புறப்பட்டனர். அப்போது புதுமந்து பகுதியில் 35வது கொண்டை ஊசி வளைவில் சென்று கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த கார் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் காரில் இருந்த 7 பேரும் யிருக்கு போராடினர், மரங்கள் அடந்த பகுதி என்பதால் அப்பகுதியில் சென்றவர்களுக்கும் தகவல் தெரியவரவில்லை. விபத்தில் சிக்கியவர்களின் சொந்த பந்தங்கள் செல்போனை எண்ணை தொடர்பு கொள்ள முயற்சித்த போது சிக்னலும் கிடைக்காததால் ஊட்டி பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

இதனை தொடர்ந்து பொலிசார் நடத்திய தேடுதல் வேட்டையில், 200 அடி பள்ளத்தில் கார் கிடந்தது தெரியவந்தது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்று மீட்புப்பணியில் ஈடுபட்ட நிலையில், ராமராஜேஷ், அருணை தவிர மற்றவர்கள் பரிதாபமாக பலியாகினர்.
படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, மலைப்பகுதியில் அதிக வேகத்தில் சென்றதே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.