15 ஆண்டுகள் நான் தவமிருந்த பெற்ற மகள் நந்தனா : அந்த பாட்டு பாடும் வரை முழிச்சுகிட்டே இருப்பா என சித்ரா கண்ணீர்!!

1269

பாடகியா சித்ரா

பிரபல பாடகியான சித்ரா தன் மகள் நினைவுகள் பற்றி மிகவும் உணர்ச்சிகரமாக பகிர்ந்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம், ஹிந்தி என பல மொழிகளில் பாடல்களை பாடி தன்னுடைய குரலால் பலரையும் ஈர்த்தவர் தான் பின்னணி பாடகி சித்ரா. இந்நிலையில் சித்ராவின் மகள் நந்தனா கடந்த 2011-ஆம் ஆண்டு துபாயில் நீச்சல் குளத்தில் விழுந்து பலியாகினார்.

திருமணம் முடிந்து 15 ஆண்டுகளுக்கு பின் சித்ராவிற்கு பிறந்த நந்தனா 8 வயதில் இறந்தார். நேற்று நந்தனாவின் பிறந்தநாள் என்பதால் அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் நீங்கள் எங்கள் வாழ்வில் பொக்கிஷம் என குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து தன் மகள் குறித்து சித்ரா பிரபல தமிழ் ஊடகம் ஒன்றிற்கு கூறுகையில், நந்தனாவுக்கு என் குரல் மிகவும் பிடிக்கும். தாலாட்டு பாடி தான் அவளை தூங்க வைக்க வேண்டும். நான் பாடிய எந்து பரஞ்சாலும் என்ற மலையாளப் பாடல், அம்மா-மகள் உறவை அழகா வெளிப்படுத்தும்.

அவளுக்காகவே அந்தப் பாடலை உருவாக்கினதா நினைச்சு, அதை அடிக்கடி என்னை பாடச் சொல்லுவாள். என்னுடன் இசைநிகழ்ச்சிக்கு வரும் போது இரவு நேரத்திலும் முழித்துக் கொண்டிருப்பாள். மேடையில் நான் இந்த பாடலை பாடி முடித்த பின்பு தான் தூங்குவாள்.

15 ஆண்டுகள் நான் தவமிருந்து பெற்ற குழந்தை, என் உயிரே நந்தனா தான், அவளுடைய இழப்பால் உண்டான வலியும், சோகமும் என் வாழ்நாள் முழுவதும் இருக்கும். ஆறாத வடு அது, அப்போ இனி வாழ்க்கையில் எல்லாமே முடிச்சிடுச்சு, இசைப்பயணத்தையே நிறுத்திடலாம் என்று முடிவெடுத்தேன்.

அந்த மிகப் பெரும் துயரத்திலிருந்து என்னால் மீளவே முடியவில்லை, ஆனால் என் குடும்பத்தினர், இசைத்துறையினர், நண்பர்கள் என பலரும் எனக்கு ஆதரவாக இருந்தார்கள், அவர்கள் எல்லோருக்கும் நான் நன்றி கடன் பட்டிருக்கிறேன் என்று உணர்ச்சிகரமாக கூறியுள்ளார்.