ஷெபீல்ட்டில் 15 வயதான சிறுவன் அதே வயது கொண்ட மற்றொரு சிறுவனைக் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கத்தியால் குத்திய 15 வயதான சிறுவன் நேற்று Lowedges என்னும் இடத்தில் பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் அவர் நாளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை இரவு 7:50 மணியளவில் இந்தக் கத்திக்குத்து இடம்பெற்றது. உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குத்தப்பட்ட சிறுவன் ஒருமணி நேரத்தில் உயிரழந்துள்ளார். மார்புப்பகுதியில் குத்தப்பட்டதனால் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்திய அறிக்கை கூறுவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்தச்சம்பவம் குறித்த இடத்தில் இவ்வாரத்தில் இடம்பெறும் இரண்டாவது கொலை என்பது குறிப்பிடத்த