15 வருடங்களாக இறந்த மனைவியின் சடலத்துடன் வாழும் கணவன்.. வீட்டிலேயே சிகை அலங்காரம் செய்து அழகு பார்த்த மகன்!!

751

கணவன் மனைவி திருமண பந்ததிற்கு பிறகு ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்வது மிகவும் கடினம். மேலும் சிலர் தன் மனைவியின் அன்பு இருக்குன்போது புரிந்துகொள்ளாதவர்கள், இனி அவர் திரும்ப வரவே மாட்டார் என்ற நிலை வரும் போது தான் அதன் கஷ்டத்தை உணர்வார்கள்.

மேலும் அதிலிருந்து மீள்வது என்பது சாதாரண விடயம் கிடையாது. அப்படி ஒருவர் தன் காதல் மனைவியை பிரிந்தபிறகு அதில் இருந்து மீள முடியாமல் தவித்துள்ளார். தன் மனைவியை கூடவே வைத்திருக்க நினைத்த அவர் என்ன செய்தார் என்பதை நீங்களே படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.வியாட்நாமில் வசிக்கும் லீ வான் என்பவரின் மனைவி 2003 ஆம் ஆண்டு உயிரிழந்தார். மேலும் இவருக்கு ஒரு கைக்குழந்தையும் இருந்துள்ளது.

தாய் இறந்த பிறகு தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாமல் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். பிணமாய் கிடந்த தாயின் உடல் மீது ஏறி விளையாட, வந்திருந்தவர்களுக்கு மனதை கலங்க வைத்துள்ளது. பெரும் துயருடன் மனைவியை இறுதி காரியங்கள் எல்லாம் செய்து புதைத்துவிட்டார்கள்.

வந்திருந்த உறவினர்கள் எல்லாம் ஒவ்வொருவராக வீட்டை விட்டு சென்றார்கள். எல்லாரும் சென்ற பிறகு தனிமையில் இருந்த லீ வான் தன்னை விட்டுச் சென்ற மனைவியைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தார்.

மனைவியின் பிரிவை தாங்க முடியாத அவருக்கு ஒரு யோசனை, அவளை மண்ணில் புதைத்து வந்துவிட்டோம் அவளுக்கு மூச்சு முட்டாதா? என்னையும் குழந்தையையும் விட்டுட்டு எப்படி அவளால் அங்கே இருக்க முடிகிறது? ஒரு வேலை அவளால் எழுந்து வர முடியவில்லையா. அவள் அங்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பாள் என்று நினைக்க ஆரம்பித்தார்.

மனைவியை புதைத்த இடத்திற்கு சென்று தோண்ட ஆரம்பித்தார். கொஞ்சம் கொஞ்சமாக தனியொருவனாக முழுதாக தோண்டி எலும்பாய் கிடந்த மனைவியின் உடலை வீட்டிற்கு எடுத்து வந்து விட்டார்.

சுற்றியிருந்தவர்கள் அத்தனை பேரும் இதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்தார்கள் லீ வானுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதாகவும், யாரோ சூனியம் வைத்துவிட்டதாகவும் பேசினார்கள். இது தவறு இப்படி எல்லாம் செய்யக்கூடாது என்று எவ்வளவோ சொல்லியும் லீ வான் கேட்கவில்லை.

எலும்பினைச் சுற்றி ஸ்கின் கலரில் பேப்பரைச் சுற்றி பேக் செய்தார். முகத்திற்கு மனைவியின் முகத்தைப் போலவே ஒரு மாஸ்க் செய்து மாட்டிவிட்டார். மனைவி விரும்பி அணியும் உடையை அந்த எலும்பு கூட்டிற்கு அணிவித்தார். தான் இருக்கும் அறையில் மனைவியை வைத்துக் கொண்டார். அதாவது அந்த எலும்புக்கு அவ்வளவு அலங்காரங்களை செய்து தன் வீட்டிலேயே வைத்துக் கொண்டார். இரவு தூங்கும் போது அதனுடனே தான் சேர்ந்து தூங்குவாராம்.

உறவினர்கள் நண்பர்கள் எவ்வளோ எடுத்துச் சொல்லியும் கேட்காததால் அவர்கள் யாருமே தற்போது லீ வானுடன் பேசுவதில்லை அதோடு அவர் வீட்டிற்கும் வருவதில்லை. 2003 ஆம் ஆண்டு இறந்த மனைவியின் எலும்பை இன்று வரையில் கலர் பேப்பர் ஒட்டியும், களிமண் கொண்டு மூடியும் அதனை பாதுகாத்து வருகிறார். மரணம் கூட நம்மை பிரிக்க முடியாது என்று சொல்கிறார் லீ வான்.

தொடர்ந்து வந்த அழுத்தம் காரணமாக 2009 ஆம் ஆண்டு மனைவியின் எலும்பை மீண்டும் புதைக்க ஒப்புக் கொண்டார். ஆனால் அப்படி புதைத்த பிறகு தன்னால் தனியாக நிம்மதியாக இருக்க முடியவில்லை அவளது உடல் மட்டும் தான் அழிந்திருக்கிறது அவளுடைய ஆன்மா இங்கே தான் எங்களைச் சுற்றி இந்த வீட்டைச் சுற்றியிருக்கிறது என்று சொல்லி மீண்டும் எடுத்துக் கொண்டு வந்து விட்டார். இது சட்டப்படி குற்றம் என்று சொல்லியும் லீ வானை அதிலிருந்து மாற்ற முடியவில்லையாம்.

முன் ஜென்மத்தில் நான் செய்த பாவம் தான் இப்போது மனிதனாக பிறந்திருக்கிறேன். கடந்த ஜென்மத்தில் செய்த பாவங்களை தீர்க்க வேண்டும் அப்படி தீர்த்து விட்டால் எனக்கும் என்னுடைய மனைவிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்று சொல்லும் லீ வானுடன் அவருடைய மகன் இருக்கிறார். இத்தனை ஆண்டுகளில் அந்த எலும்பும் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து சிதைந்திருக்கிறது. அதை ஜிப்சம் கொண்டு பூச்சு போல பூசி வைத்திருக்கிறார்கள்.