150 பெண்களின் பிணங்களை தோண்டி எடுத்து நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்!!

1430

தினமும் 20 மைல் தூரம் நடந்து 752 கல்லறைகளை ஆராய்ந்து 150 சிறுமிகளின் பிணங்களை தோண்டியெடுத்த ஒரு நபர் அந்த பிணங்களை பொம்மைகளாக மாற்றி அவைகளுக்கு பிறந்த நாள் கொண்டாடிய அபூர்வ சம்பவம் ஒன்று ரஷ்யாவில் நடைபெற்றுள்ளது.

மத்திய ரஷ்யாவை சேர்ந்த வரலாற்றாளரான இவர் பெயர் மோஸ்க்வின். விடுமுறைக்காக வெளியூர் சென்றிருந்த மோஸ்க்வினுடைய பெற்றோர் வீடு திரும்பியபோது வீடு முழுவதும் விதம் விதமாக வண்ணமயமாக உடையணிந்த பொம்மைகள் இருப்பதைக் கண்டனர்.

பின்னர் அவை கல்லறைகளிலிருந்து தோண்டியெடுக்கப்பட்டு பதப்படுத்தப்பட்ட உடல்களால் செய்யப்பட்ட பொம்மை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

இவர் தோண்டி எடுத்த ஒவ்வொரு பிணம் குறித்த தகவல்களையும் அவர் கணினியில் சேமித்து வைத்துள்ளதோடு அவைகளுக்கு பிறந்த நாளும் கொண்டாடியிருக்கிறார்.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து அறிந்த பொலிசார் மோஸ்க்வினை கைது செய்துள்ளனர். பின்பு அவரை மருத்துவமனையில் பரிசோதித்து பார்த்த போது தான் மோஸ்க்வின் ஒரு மன நலம் பாதிக்கப்பட்டவர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.