பட வாய்ப்பு இல்லைன்னதும் இப்படி ஆகிட்டாரே.. வைரலாகும் ஷிவானியின் லேட்டஸ்ட் வீடியோ!!

486

ஷிவானி நாராயணன்..

பிக் பாஸ் பிரபலம் ஷிவானி நாராயண வெளியிட்டுள்ள புதிய இன்ஸ்டா வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் ஷிவானி நாராயணன். விஜய் டிவி தொடர்களில் நடித்து வந்த ஷிவானி நாராயணன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

பிக் பாஸ் சீசன் மூன்றில் போட்டியாளராக பங்கேற்ற லாஸ்லியாவை ஓரங்கட்டும் அளவுக்கு தனது அழகால் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர் ஷிவானி நாராயணன். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் கமல்ஹாசன் தயாரித்து நடித்த விக்ரம் படத்தின் மூலம் கடந்த ஆண்டு கோலிவுட்டில் அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். நடிகர் விஜய் சேதுபதியின் மூன்றாவது மனைவியாக விக்ரம் படத்தில் நடித்திருந்தார்.

அந்தப் படத்தை தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில் ஆர் ஜே பாலாஜி, அபர்ணா பாலமுரளி நடித்த வீட்ல விசேஷம் படத்தில் பாடல் காட்சியில் நடித்து சென்றார். மீண்டும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான டிஎஸ்பி படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த ஷிவானி நாராயணன் வைகைப் புயல் வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் நடித்திருந்தார்.

கடைசியாக இந்த ஆண்டு எட்டு தோட்டாக்கள் வெற்றியுடன் இணைந்து பம்பர் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். ஆனால் பம்பர் திரைப்படத்திற்கு பிறகு ஷிவானி நாராயணனுக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் இன்னும் கிடைக்கவில்லை என்றே தெரிகிறது. தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பதிவுகளை போட்டு வரும் ஷிவானி நாராயணன் தற்போது வளையம் ஒன்றை வைத்து இடுப்பை ஆட்டி அதை சுற்றி Hoola Hoop நடனத்தை ஆடியோ வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by @shivani_narayanan