உலகின் கோடீஸ்வர தம்பதியர்கள்!!

665

தொழிற்துறை, அரசியல், சினிமா போன்ற துறைகளில் கொடி கட்டி பறக்கும் பணக்காரர்கள், தங்களது தனிப்பட்ட வாழ்க்கையிலும் வெற்றிகரமாக இருக்கிறார்கள்.

அதற்கு காரணம், தம்பதியர்கள் செய்யும் பணியினை இருவரும் சேர்ந்து ஒத்துழைப்பு மற்றும் முழு பங்களிப்போடு செய்வதாகும்.

Jeff Bezos – Mackenzie Bezos
அமேசான் நிறுவனர் ஆவார், இவரது சொத்து மதிப்பு $92.7 billion.24 ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். ஆரம்பத்தில், Jeff Bezos முதலீட்டு நிறுவனத்தில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பின்னர் அங்கிருந்து விலகி, அமேசான் நிறுவனத்தை தொடங்கினார்.

தனது மனைவி மீது அதிக அன்பு கொண்டிருக்கும் Jeff, அவ்வப்போது அதிகமான துணிகளை வாங்கிகொடுத்து தனது மனைவியை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்துவது இவரது வழக்கம்.

Bill – Melinda Gates
மைக்ரோசாப்ட் நிறுவனர், தொழிற்துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரரான இவரது சொத்து மதிப்பு $89.6 billion. தம்பதியினர் இருவரும் அதிக தொண்டு நிறுவனம் நடத்தி வருவதால், அமெரிக்காவின் உயரிய சிவில் விருது இந்த சேவைக்காக வழங்கப்பட்டது.

23 ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் திருமணம் செய்துகொண்டனர்.

Mark Zuckerberg – Priscilla Chan
சமூகவலைதளங்களில் முன்னணி நிறுவனமாக இருக்கும் பேஸ்புக்கின் தலைமைசெயல் அதிகாரி ஆவார். கல்லூரியில் படிக்கும் பிரிசில்லாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். மார்க் செய்யும் அனைத்து வேலைகளுக்கும் பிரிசில்லா பக்கபலமாக இருக்கிறார்.

உலகளாவிய சுகாதாரம், கல்வி மற்றும் சமூகத்தை ஆராய்வதற்காக Chan Zuckerberg Initiative என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை 2 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கினர்.

Evan Spiegel – Miranda Kerr
ஸ்னாப்சாட் என்ற சமூகவலைதளத்தின் தலைமைசெயல் அதிகாரி ஆவார். இவரது சொத்து மதிப்பு $3.44 billion ஆகும். அவுஸ்திரேலிய மொடலான Miranda- வை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பின்னர், தனது மனைவியின் ஒத்துழைப்பு அதிகமாக இருப்பதால், தன்னால் தொழிலில் சிறந்து விளங்க முடிகிறது என கூறியுள்ளார்.


Ivanka Trump – Jared Kushner
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்பின் மூத்த மகள் ஆவார். தம்பதியினரின் இரண்டு பேரின் தனித்தனியான சொத்து மதிப்பு $207 million மற்றும் $762 million ஆகும். இருவருமே அரசியல் துறையில் வெற்றிகரமாக பயணிக்கிறார்கள்.

இவாங்கா டிரம்ப், டொனால்ட் டிரம்பிற்கு முதன்மை ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார்.