வெளியான அந்த மாதிரி வீடியோ.. உச்சகட்ட பயத்தில் கீர்த்தி சுரேஷ்!!

350

கீர்த்தி சுரேஷ்..

AI தொழில்நுட்பம் தற்போது பிரபலமடைந்து வருகிறது. இந்த தொழில்நுட்பத்தை வைத்து பல்வேறு விஷயங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில், குறிப்பாக நம் கற்பனையில் நினைக்கும் விஷங்களை கூட நெட்டிசன்கள் அதில் செய்து வருகின்றன. இதனிடையே, முன்னதாக பல பிரபலங்களின் போட்டோக்களையும் AI தொழில்நுட்பம் மூலமாக மாற்றம் செய்து வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், நடிகை ராஸ்மிகா மந்தனாவின் முகத்தோடு வெளிநாட்டு மாடலின் வீடியோவை எடிட் செய்து வைரலாகியுள்ளனர். இதற்கு கடும் கண்டனங்களும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கொடுத்து வந்தன. இதேபோல், முன்பு ஜெய்லர் படத்தில் காவலா பாடலுக்கு ஆட்டம் போட்ட தமன்னாவிடம் துவங்கியது. தமன்னாவின் முகத்தை எடிட் செய்து சிம்ரன் முகத்தை வீடியோவாக வெளியிட்டு வைரலாகினர். அதில், நடிகை சிம்ரன் ஆதரவு செய்து நன்றி தெரிவித்தார்.

இந்நிலையில் ராஷ்மிகா மந்தனாவின் புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாச வீடியோவாக வெளிவந்து பேரதிர்ச்சி கொடுத்தது. இச்சம்பவம் சமூகவலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் இது குறித்து முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ள நடிகை ரஷ்மிக்கா, இது போன்ற மோசமான தொழில்நுட்ப செயல்கள் மனதிற்கு பயத்தை கொடுக்கிறது. ஆனால், இது ராஷ்மிகா விசயத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் மத்திய அரசு இதற்கான ஒரு தண்டனைகளை அறிவித்துள்ளது.

இது மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், மத்திய அரசு இதற்கான ஒரு தண்டனையை அறிவித்துள்ளது. ஒருவரை தவறாக சித்தரித்து பதிவிட்டால் மூன்று ஆண்டுகள் சிறையும், ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்றும், இது பற்றி புகார் வந்தால் 24 மணி நேரத்தில் அந்த படம் மற்றும் வீடியோ நீக்கப்பட வேண்டும் என்றும், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனை தொடர்ந்து, நடிகை கேத்ரினா கைப்பின் AI வீடியோவும் இணையதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.இது குறித்து ராஷ்மிகா கண்டித்து ஒரு பதிவினை போட்டார். மேலும், ராஷ்மிகாவுக்கு ஆதரவாக நடிகர் அமிதாபச்சன் நாகசைதன்யா உள்ளிட்டவர்களும் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர். இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் அந்த வீடியோவை எதிர்த்து ஒரு பதிவினை சமீபத்தில் போட்டிருந்தார்.

எனக்கு பயமாக உள்ளது. அதை உருவாக்கிய நபர் அந்த நேரத்தில் வேறு யாருக்காவது நல்லது செய்திருக்கலாம். இந்த தொழில்நுட்பத்தால் நமக்கு வரமா சாபமா என்று புரியவில்லை. அன்பு பாசிட்டிவ் மட்டுமே பரப்புவோம் மனிதர்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். மேலும், இந்த விஷயத்தால், கீர்த்தி சுரேஷ் உட்பட பல நடிகைகள் பயந்து வருவது குறிப்பிடத்தக்கது.