அட்ஜெஸ்ட்மெண்ட்க்கு மறுத்த இளம் நடிகை.. ஷூட்டிங்கில் டார்ச்சர் செய்து ஓட வைத்த பிரபல இயக்குனர்!!

328

இளம் நடிகை..

சினிமாத்துறையில் தற்போது பெரியளவில் பேசப்பட்டு செய்தி என்ன வென்றால் நடிகைகளுக்கு நடந்த கொடுமையாக செயல்கள் தான். அப்படி பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் நடிகை விசித்ரா கூறிய சம்பவமும், நடிகை திரிஷாவை கடுமையாக விமர்சித்து பேசிய மன்சூர் அலிகான் சம்பவமும் தான் பேசப்பட்டு வருகிறது.

இது ஒரு பக்கம் இருக்க பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன், பாரதிராஜாவுடன் பயணித்த ஒரு இயக்குனர் இளம் நடிகைக்கு கொடுத்த டார்ச்சர் பற்றி பகிர்ந்துள்ளார். பாரதிராஜா முக்கியத்துவம் கொடுக்ககூடிய ஒரு இயக்குனர், அதுவும் கோபக்காரர் இயக்குனர் தான் அவர். ஒரு நடிகையை வைத்து படம் எடுக்க கதையை எடுத்தார்.

வழக்கம் போல ஒரு இயக்குனர், நடிகை மீது ஏற்படுகிற இச்சை ஏற்படுகிறது. நடிகை இளம் நடிகை என்பதால் அந்த இயக்குனர் பார்த்தால் பிடிக்காதாம். ஒரு நாள் இயக்குனர் ஓப்பனாக அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்டிருக்கிறார்.ஆனால் நடிகை அப்படியான வாய்ப்பு வேண்டாம், முடிந்தால் இருப்பேன், இல்லை என்றால் சினிமாவை விட்டு போய்விடுவேன் என்று கூறியிருக்கிறார். நடிகை அப்படி சொல்லும் போது படத்தில் பாதி ஷூட்டிங் முடிந்த நிலையில், நடிகையை வழிக்கு கொண்டுவர பிளான் செய்துள்ளார்.

அப்போது இருக்கும் டிவிஎஸ் 50- ஸ்கூட்டியை ஓட்ட சொல்ல கத்துக்கொடுத்து இருக்கிறார். மூன்றாவது நாள் சீனில் அந்த நடிகையை அசிங்கமாக திட்டுவதை மக்களும் பார்த்திருக்கிறார்கள். கிராமத்தில் நடப்பதால் கவேரியில் தண்ணியில்லாத சமயம். இயக்குனர் நடிகையிடம், டிவிஎஸ் 50- ஸ்கூட்டியுடன் சிமெண்ட் தரையில் தள்ளிக்கொண்டு போக சொல்லியுள்ளார்.

நடிகை எப்படி இது முடியும் என்று வற்புறுத்தலின் பெயரில் ஓட்டியுள்ளார். அதனால் கீழே விழுந்த நடிகைக்கு பெரிய அடி. இதை பார்த்த மக்கள் இயக்குனரை அடிக்க சென்றுள்ளனர். இயக்குனர் பதறி போனதும், நடிகை அந்த இடத்தில் இருந்து சென்றேவிட்டாராம். அந்த நடிகைக்கு திருமணமாகிவிட்டதால் நடிகையின் பெயரை குறிப்பிடாமல் இந்த விசயத்தை பகிர்ந்துள்ளார் அந்தணன்.