ரேகா நாயர்..
பிரபல சர்ச்சையிக்குரிய சீரியல் நடிகையான ரேகா நாயர் தமிழ் சினிமாவின் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்ததன் மூலம் மக்களிடையே பரவலாக முகமறியப்பட்டார். இவர் விஜய் டிவியில் ஆண்டாள் அழகர் தொடரில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்த இவர் தொடர்ந்து சன், கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறார்.
இவர் மறைந்த பிரபல சீரியல் நடிகையான விஜே சித்ராவின் தோழி. சித்ராவின் தற்கொலை ரகசியங்களை குறித்து கூட பல யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுத்து பரபரப்பை கிளப்பியுள்ளார். அதன் பின்னர் இயக்குனர் பார்த்திபனின் இரவின் நிழல் படத்தில் ஆபாச காட்சிகளில் அரைநிர்வாணமாக நடித்து சர்ச்சை ஏற்படுத்தினார். இதனால் அவரை பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்டோர் மோசமாக விமர்சிக்க அவரை ரேகா அடித்து துவைத்ததெல்லாம் செய்தியாக வெளியானது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் மன்சூர் அலிகான் திரிஷாவை பற்றி மோசமாக பேசியதற்கு வக்காலத்து வாங்கும் வகையில் பேசிய ரேகா நாயர், பின்னர் மன்சூர் அலிகானுக்கு நான் சப்போர்ட் பண்ணல… அதுபோன்று நடந்துக்கொள்பவர்களுக்கு துக்கு தண்டனை கொடுக்கவேண்டும் என்பது தான் என் கருத்து என்றார்.
அதே போல் தான் நான் ஆடை சுதந்திரம் பற்றி பேசினது தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டது. நான் கவர்ச்சி உடைகளை அணிந்து வெளியே செல்லும்போது ஒருவன் என் தொடையை தொட்டால் நான் அவன் கழுத்தை பிடிப்பேன். அது தான் பெண் சுதந்திரம். ஆடை அணியாமல் வெளியில் செல்வது பெண் சுந்திரம் இல்லை என அவரது பார்முலாவில் விளக்கம் கொடுத்தார்.