சின்மயிக்கு குவியும் ஆதரவுகள் : சட்ட ரீதியாக ஒரு கை பார்க்க தயாரான பிரபல நடிகை!!

1010

பிரபல பாடகியான சின்மயி

பிரபல பாடகியான சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கொடுத்ததையடுத்து, அவருக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் மூலம் பல பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் வன்புணர்வு பற்றி வெளி உலகிற்கு சொல்ல தொடங்கி உள்ளனர்.

அதை சின்மயி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். சின்மயிக்கு பலர் ஆதரவு கொடுத்தாலும் ஒரு சிலர் முரண்பட்ட கருத்துக்களை கூறி வருகின்றனர். ஏன் இவ்வளவு நாட்கள் கழித்து பேச வேண்டும்? அப்போதே பேசியிருக்கலாமே? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகையும், நிகழ்ச்சி தொகுப்பாளருமான ஸ்வர்ணமால்யாவும் சின்மயிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர், இந்த பிரச்சனைக்கு சட்ட ரீதியாக ஆலோசனை செய்து வருவதாகவும், எதிர்காலத்தில் பெண்களுக்கு எதிராக பாலியல் கொடுமை செய்பவர்களுக்கு இந்த சட்ட நடவடிக்கை நல்ல பாடத்தை புகட்டும் என ஆதரவு குரல் கொடுத்துள்ளார்.

தற்போதைய நிலையில், பாடகி சின்மயிக்கு ஆதரவாக அதரவு குரல் கொடுத்து வருபவர்கள் அதிகமாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.