அழகை காட்டி விதவிதமாக போஸ் கொடுத்து மிர்னா வெளியிட்ட புகைப்படங்கள் : வாயை பிளந்த ரசிகர்கள்!!

176

மிர்னா மேனன்…

கேரளாவை சேர்ந்த இவர் அதிதி மேனன் என்கிற பெயரில் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதன்பின் மிர்னா என பெயரை மாற்றிக்கொண்டார். டிகிரி முடித்துவிட்டு துபாயில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்தார். ஆனால், மனதுக்குள் நடிகையாக வேண்டும் என்கிற ஆசை இருந்து கொண்டே இருந்தது.

எனவே, அந்த வேலையை விட்டுவிட்டு கேரளாவுக்கு வந்து வாய்ப்புகள் தேடினார். சில டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். சினிமாவில் இவருக்கு முதல் வாய்ப்பு வந்தது தமிழில் இருந்துதான். அப்படி அவர் நடித்த திரைப்படம்தான் நெடுநல்வாடை. ஆனால், அந்த இயக்குனர் மீது பரபரப்பு புகாரை கூறிவிட்டு அப்படத்திலிருந்து விலகினார்.

பட்டதாரி, களவாணி மாப்பிள்ளை ஆகிய படங்களில் நடித்தார். அமீர் இயக்கத்தில் ஆர்யா நடித்த சந்தனத்தேவன் எனும் படத்திலும் நடித்தார். ஆனால், சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் படம் நின்று போனது. மலையாளத்தில் மோகான்லாலுடன் இணைந்து பிக் பிரதர் என்கிற படத்தில் நடித்தார்.

அப்படியே ஆந்திரா பக்கம் போய் 2 தெலுங்கு படங்களில் திறமை காட்டினார். புர்கா எனும் டெலி பிலிமில் நடித்தார். இந்த படத்தில் நடிகர் கலையரசன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ரஜினி நடித்த ஜெயிலர் படத்தில் அவரின் மருமகளாக நடித்திருந்தார். ஒருபக்கம், அழகை காட்டி விதவிதமாக போஸ் கொடுத்து மிர்னா வெளியிட்டு வரும் புகைப்படங்களுக்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு இருக்கிறது.

எனவே, தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், மிர்னாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை பெற்று வருகிறது.