பாலாபாஸ்கர்
கேரளாவில் கார் விபத்தில் சிக்கிய இசையமைப்பாளரின் 2 வயது குழந்தை உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாங்கல்ய பல்லாக்கு என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் பாலாபாஸ்கர்.
திருச்சூரிலுள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பும்போது ஓட்டுநரின் கவனக்குறைவால் கார் சாலையோர மரத்தில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் அவரது இரண்டுவயது குழந்தை தேஜஸ்வினி உயிரிழந்தது.
இசையமப்பாளர் பாலாபாஸ்கர் மற்றும் அவரது மனைவி லட்சுமி படுகாயமடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாலாபாஸ்கருக்கு திருமணமாகி 16 ஆண்டுகளாக குழந்தை இல்லை. குழந்தை ஆசையில் இருந்த இந்த தம்பதியினருக்கு 16 ஆண்டுகள் கழித்து தேஜஸ்வினி என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது.
ஆனால், அந்த சந்தோஷம் இவர்களுக்கு நீடிக்கவில்லை. குழந்தை இறந்துபோனது அவரது உறவினர்கள் உட்பட அனைவரும் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
திருமணமாகி 16 வருடங்களுக்கு பிறகு பிறந்த குழந்தை உயிரிழந்துள்ளதால் அவரது உறவினர்கள் உட்பட அனைவரும் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்