சூரியகாந்தி மலர் சூரியனை நோக்கி திரும்புவது ஏன்? உங்களுக்கு தெரியுமா?

1944

சூரியகாந்தி மலர் மட்டுமன்றி பல்வேறு வகை மலர்களுமே சூரியனை நோக்கியே திரும்புகின்றது. ஆனால் நாம் சூரியகாந்தி மலரை மட்டும் பார்த்திருக்கின்றோம்.

ஆனால் அதற்கான காரணத்தை நாம் என்றாவது யோசித்தது உண்டா?

சூரியகாந்தி மலர் சூரியனை நோக்கி திரும்புவது ஏன்?

சூரியகாந்தி மலர் சூரியனை நோக்கி திரும்புவதற்கு ஃபோட்டோட்ராப்பிஸம் என்னும் செயல்பாடு முக்கிய காரணமாகும்.

அதாவது சூரியனில் இருந்து வரும் ஒளிக்கதிர்களால் சூரியகாந்தி செடிகளின் தண்டு வளர்ச்சி அடைகிறது.

இவ்வேதி மாற்றத்தையே ஃபோட்டோட்ராப்பிஸம் என்று கூறுவார்கள். இச்செயலானது, அத்தண்டில் உள்ள ஆக்சின் என்னும் ஹார்மோனால் நடைபெறுகிறது.

இந்த ஆக்சின் என்னும் ஹார்மோன் சூரியகாந்தி செடிகளின் தண்டினை நீள்வாக்கில் வளரச் செய்கிறது.

இந்த செடிகளின் மீது சூரியக்கதிர்கள் படும் போது சூரியக்கதிர்கள் படாத அதன் நிழல் பாகத்தில் ஆக்சின் ஹார்மோன் அதிகம் சுரந்து அச்செடியின் தண்டினை வளரச் செய்கிறது.

எனவே சூரியகாந்தி பூக்கள் சூரியனை நோக்கித் திரும்பி சூரிய ஒளியைப் பெற முயற்சிக்கும். அப்போது அச்செடியின் தண்டுப் பகுதியில் சூரியஒளி விழாதபடி அவை மறைத்துக் கொண்டு நிழலை உண்டாக்கும்.

இந்த செடியின் தண்டில் இருக்கும் அமினோஅமிலம் ட்ரிப்டோஃபேன் மற்றும் கார்போஹைட்ரேட் ஆகியவை சிதைக்கப்பட்டு, ஆக்சின் ஹர்மோனாக மாற்றம் அடைந்து சூரியகாந்தி செடியை வளரச் செய்கிறது.

அதனால் தான் சூரியகாந்தி மலர் சூரியனை பார்க்க திரும்புகிறது.