சின்மயியின் அம்மாவின் தொல்லை தாங்காமல் கணவர் விலகிவிட்டார் : வைரமுத்துவின் உதவியாளர் பேட்டி!!

762

சின்மயியின் அம்மா

பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வைரமுத்து தரப்பில் இருந்து முதன்முறையாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகம் மற்றும் இசைத்துறையில் செயல்பட்டுவரும் முக்கிய கலைஞர்கள் தொடர்பில் பாலியல் அத்துமீறல்களை பலர் பகிர்ந்து கொண்டதை பாடகி சின்மயி மற்றும் பத்திரிகையாளர் சந்தியா மோகன் ஆகியோர் வரிசையாக அம்பலப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சுவிட்சர்லாந்தில் ஒரு கலைநிகழ்ச்சிக்காக சென்ற இடத்தில் பாடலாசிரியர் வைரமுத்து தம்மை ஹொட்டல் அறையில் சந்திக்க நிர்பந்தம் செலுத்தியதாக சின்மயி பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.

இந்த விவகராம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் வைரமுத்து எப்போதுமே இப்படித்தான் என பலர் தங்கள் கருத்துக்களை முன்வைத்து சின்மயிக்கு ஆதரவாக களமிறங்கினர்.

இந்த நிலையில் வைரமுத்துவின் உதவியாளர் பாஸ்கர் என்பவர் இணையதளம் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில், சுவிட்சர்லாந்தில் என்ன நடந்தது என்பது தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.

அதில் நிகழ்ச்சி முடிந்த மறுநாளே வைரமுத்து அங்கிருந்து இந்தியா திரும்பியதாகவும், சின்மயியும் அவரது தாயாரும் மேலும் சில நாட்கள் அங்கு தங்கிவிட்டு திரும்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதற்கு நேர்மாறாக, வைரமுத்துவால் தாம் உடனடியாக கிளம்பும் சூழல் ஏற்பட்டது என சின்மயி கூறியிருப்பது பொய் என்றார் பாஸ்கர். மட்டுமின்றி, சின்மயி மற்றும் அவரது அம்மா இருவரும் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் போன்றே கடந்த காலங்களில் நடந்து கொண்டுள்ளனர்.

இவர்களது தொல்லை தாங்க முடியாமல் தான், சின்மயி தந்தை இவர்களைவிட்டு விலகிச் சென்றார் என்கின்றனர் உண்மை அறிந்தவர்கள். மட்டுமல்ல, மனநலன் தொடர்பான சிகிச்சையும் அவர் எடுத்துக் கொண்டதாகவும் ஒருதகவல் உண்டு என்றார் பாஸ்கர்.

2013 ஆம் ஆண்டு வைரமுத்துவுக்கு பத்மபூசன் விருது கிடைத்தபோது, அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க பொக்கே ஒன்றுடன் சின்மயி வந்திருந்தார். ஆனால் வைரமுத்து தன்னைப் பார்க்க சின்மயியை அனுமதிக்கவில்லை எனவும் பாஸ்கர் அந்த இணையதளத்தில் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.