உலகையே உலுக்கும் MeToo பாலியல் புகார்கள் : இப்படியும் சில பெண்கள்… உண்மை சம்பவம்!!

802

MeToo பாலியல் புகார்கள்

சமீப காலமாகவே உலகம் முழுவதையும் MeToo என்ற ஹாஸ்டேக் உலுக்கி வருகிறது. இதில் நிறைய பிரபலங்களின் உண்மை முகங்கள் வெளிகொண்டுவரப்பட்டு வருகின்றது.

இதற்கு ஆதரவாக ஏராளமான சமூக ஆர்வலர்கள் தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதேசமயம் ஒரு சில ஆண்கள் இதனை ஏற்க சற்று தயக்கம் காட்டியே வருகின்றனர். இதற்கு உலகில் பல சான்றுகள் இருந்தாலும், இந்திய முழுவதையும் திரும்பி பார்க்க வைத்த ஒரு சம்பவம் ஒன்று உள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் 28ம் தேதியன்று ஓடும் பேருந்தில் 19 வயதான 3 இளைஞர்களை இரண்டு பெண்கள் அடித்து வெளுத்து வாங்கினார்கள். இந்த வீடியோ இணையதளத்தில் வெளியானதும் ஒட்டுமொத்த இந்தியாவும் அவர்களை தூக்கி வைத்து கொண்டாடியது.

அனைத்து ஊடகங்களும் தங்களுடைய தலைப்பு செய்திகளில் அவர்களை ‘வீர மங்கைகள்’ என பெயர் சூட்டி மகிழ்ந்தனர். மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு பெண்களுக்கு ஒரு முன்மாதிரி என புகழாரம் சூட்ட ஆரம்பித்தனர்.

ஹரியாணாவின் ரோட்டக் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் ஆர்த்தி, பூஜா எனவும், அவர்கள் இருவரும் கல்லூரியில் படித்து வருபவர்கள் எனவும் பொலிஸாரால் அடையாளம் கண்டறியப்பட்டனர்.

அவர்களை கௌரவிக்கும் விதமாக ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கத்தார், குடியரசு தின விழாவில் இரண்டு பெண்களுக்கும் தலா 51,000 ரூபா ரொக்க பரிசாக வழங்கப்படும் என அறிவித்தார். இதற்கிடையில் குல்தீப், மோஹித் மற்றும் தீபக் என்ற மூன்று இளைஞர்களையும் பொலிஸாரால் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதேசமயம் நவம்பர் 2ம் தேதியன்று மற்றொரு வீடியோ இணையத்தில் வைரலாக பரவ ஆரம்பித்தது. அதில் ஆர்த்தி, பூஜாவும் ஒரு இளைஞரை கடுமையாக தாக்கி கொண்டிருந்தனர். அந்த வீடியோவோம் இணையத்தில் வைரலானதை அடுத்து, பொலிஸார் விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

அந்த வீடியோ தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் வீடியோ ஒரு மாதத்திற்கு முன்னதாக எடுக்கப்பட்டது என தெரியவந்தது.
அதில், தங்களுக்கு பணம் தராவிட்டால், பாலியல் துஸ்பிரயோகம் செய்ததுவிட்டாய் என பொலிஸில் பொய் புகார் கொடுத்துவிடுவோம் என அந்த பெண்கள் மிரட்டியதாக தெரியவந்தது. மேலும் அந்த இளைஞரிடம் இருந்து ரூ.20,000 மிரட்டி வாங்கியிருப்பதும் கண்டறியப்பட்டது.

இதனால் பெரும் குழப்பத்திற்கு உள்ளான பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது பேருந்தில் பயணித்த பலரும் மூன்று இளைஞருக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்தனர். அந்த பேருந்தில் மூதாட்டி ஒருவரின் இருக்கையை ஆர்த்தியும் பூஜாவும் ஆக்கிரமித்துள்ளனர். இதை ஆட்சேபித்த கல்லூரி மாணவர்கள் தீபக், மோஹித், குல்தீப் ஆகியோர் மூதாட்டிக்கு ஆதரவாகப் பேசியுள்ளனர்.

ஆத்திரமடைந்த அக்காவும் தங்கையும் 3 மாணவர்களையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். அதனை செல்போனில் படம் பிடிக்குமாறு தங்கள் தோழியிடம் கூறியுள்ளனர். பின்னர் வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டதோடு, அவர்களுடைய அம்மாவை அழைத்துக்கொண்டு பொலிஸ் நிலையத்திலும் புகார் அளித்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து உண்மை கண்டறியும் சோதனை இரண்டு பெண்களுக்கும் நடத்தப்பட்டது. அதில் இரண்டு பெண்களுமே தோல்வியடைந்தனர்.

இதனையடுத்து 50 சாட்சிகளின் அடிப்படையில் 200-பக்க குற்றச்சாட்டு அறிக்கை ரோட்டக் நீதிமன்றத்தில், கடந்த 2017 மார்ச்சில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனை ஆராய்ந்த நீதிபதி 3 மாணவர்களும் நிரபராதிகள் என்று கூறி விடுதலை செய்து உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து செஷன்ஸ் நீதிமன்றத்தில் இரு பெண்களும் மேல்முறையீடு செய்தனர். இதனை விசாரித்த செஷன்ஸ் நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 11-ம் ரோட்டக் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.

இளைஞர்களுக்கு ஆதரவாக வாதாடிய சந்தீப் ரதி கூறுகையில், இங்கு பெரும்பாலும் பெண்களுக்கு ஆதரவாகவே செய்திகள் வெளியிடப்படுகின்றன. சகோதரிகளுக்கு ‘வீரமங்கைகள்’ என்று பட்டம் சூட்டிய ஊடகங்கள், 3 மாணவர்களையும் அரக்கர்களைப் போன்று சித்தரித்தன. வீடியோ வெளியானபோது நாள்தோறும் பரபரப்பாக செய்திகள் வெளியாகின.

ஆனால் 3 மாணவர்களும் விடுதலைசெய்யப்பட்ட போது எந்த ஊடகமும் கண்டுகொள்ளவில்லை. போலி புகாரால் எதிர்காலத்தை தொலைத்து நிற்கும் 3 பேரும் அப்பாவிகள் என்பதை ஊடகங்கள் உரக்க அறிவிக்க வேண்டும். இனிவரும் காலங்களில் ஒருதரப்பாக செய்தி வெளியிடுவதைத் தவிர்த்து இருதரப்பு நியாயத்தையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்”என்று தெரிவித்தார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் தீபக் மற்றும் குல்தீப் கூறுகையில், விடுதலையானாலும் எங்களுடைய வாழ்க்கை தொலைந்துவிட்டது. ராணுவத்தில் சேர அதிகபட்ச வயது 23. ஆனால் தற்போது எங்களுக்கு 24 வயதாகிவிட்டது. பொலிஸ் புகாரால் வாழ்க்கை பாழாகிவிட்டது. தீபக்கின் கல்லூரி படிப்பு பதியிலியேயே தடைபட்டுவிட்டது என தெரிவித்துள்ளார்.

அதேமசயம் இதுகுறித்து கூறிய மோகித், இந்த சம்பவத்தால் நானும் என்னுடைய பெற்றோரும் ஏராளமான அவமானங்களை சந்தித்து விட்டோம். பொலிஸில் சேர வேண்டும் என்ற என்னுடைய சிறு வயது கனவு தற்போது தகர்ந்துவிட்டது. வெளியில் பர்தா அணிந்து செல்லும் நிலைக்கு என்னுடைய தாய் தள்ளப்பட்டு விட்டார் என வேதனை தெரிவித்துள்ளார்.