பிறந்தநாள் விழாவில் சிறுவனுக்கு நடந்த பரிதாப சம்பவம் : வைரலாகும் புகைப்படத்தின் பின்னணி!!

743

பிறந்தநாள் விழா

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தை சேர்ந்த ஒரு சிறுவன் தன்னுடைய பிறந்தநாள் விழாவிற்கு அழைப்பு விடுத்தும் கூட யாரும் வராததால் மனம் உடைந்து போன நிலையில் அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையதளம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தை சேர்ந்த 6 வயது சிறுவனான டெட்டியின் பிறந்தநாள் கடந்த 3ம் தேதியன்று வந்துள்ளது. ஆனால் அலாஸ்காவில் வேலை செய்துகொண்டிருந்த சிறுவனின் தந்தையால் 18ம் தேதி தான் ஊருக்கு வரமுடிந்துள்ளது.

அதனால் சிறுவனின் பிறந்தநாளை 21ம் தேதியன்று பிரமாண்டமாக கொண்டாட அவனுடைய அம்மா சில் மாஜினி முடிவு செய்துள்ளார். அதன்படி 32 அழைப்பிதழ்களை ஏற்பாடு செய்து சிறுவனின் பள்ளி தோழர்களுக்கு கொடுத்துள்ளார். மேலும் அந்த சிறுவர்களின் அம்மாவிடமும் அனுமதி கேட்டுள்ளார். அதற்கு அவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் பிறந்தநாள் கொண்டாடப்பட்ட அன்று யாருமே விழாவிற்கு வருகை தரவில்லை. இதனால் அந்த சிறுவன் பீட்சாவால் நிறைந்திருக்கும் இரண்டு நீளமான மேஜைகளுக்கு மத்தியில் மனமுடைந்த நிலையில் காணப்பட்டான்.

இதை புகைப்படமாக எடுத்த அவனுடைய அம்மா ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். புகைப்படம் இணையத்தில் வைரலானதை அடுத்து, Phoenix விளையாட்டு அணிகள் தங்களுடைய வரவிருக்கும் போட்டிகள் அனைத்தையும் இலவசமாக காண சிறுவனுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

அதேபோல NBA அணி புதன்கிழமை நடைபெற உள்ள போட்டியை இலவசமாக காண சிறுவனின் குடும்பத்தாருக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதனை தொடர்ந்து வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள கால்பந்து போட்டியை துணை குடியரசுத்தலைவருடன் சேர்ந்த காணவும் அழைத்துள்ளனர்.